2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இன்றைய பலன்கள் (01.11.2014)

A.P.Mathan   / 2014 ஒக்டோபர் 31 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}



இன்றைய பலன்கள் (01.11.2014)
 
மேடம்
அடி மனதில் இருந்த சோம்பல் அலட்சியம் நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். மனைவியுடன் சண்டையிட நேரிடும். விட்டுக் கொடுத்து போவது நல்லது.
அஸ்வினி :துக்கம் 
பரணி : ஆர்வம்
கிருத்திகை 1ஆம் பாதம் : இன்பம்
 
 
இடபம்
வியாபாரத்தில் விளம்பர யுக்திகளை கையாள்வது நல்லது. உத்தியோகத்தில் அடுத்தடுத்து சவால்களை சந்தித்தாலும் உயர்வு உண்டு சிலருக்கு அயல் நாட்டு வாய்ப்புக்கள் தேடி வரும்.
கிருத்திகை 2, 3, 4: செலவு
ரோகிணி : வெறுப்பு
மிருகசீரிடம் 1, 2: துன்பம் 
 
 
மிதுனம் 
புராதனமான புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். இடையிடையே பணப் பற்றாக்குறையையும் சமாளிக்க வேண்டி வரும்.
மிருகசீரிடம் 2, 3 : மகிழ்ச்சி 
திருவாதிரை : இன்பம் 
புனர்பூசம்: நலம்
 
 
கடகம்
உங்கள் நட்பு வட்டத்தில் பிரபலங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆரோக்கியம் அழகு கூடும். புது சலுகைகள் கிடைக்கும். 
புனர்பூசம்: மகிழ்ச்சி
பூசம்: ஆரோக்கியம்
ஆயில்யம்: இன்பம் 
 
 
சிம்மம்
புதுவிதமாக யோசிப்பீர்கள். உங்களுடைய திறமையை பின்பற்றி முன்னேறுவதற்கும் நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும்.
மகம்: மகிழ்ச்சி 
பூரம்: இன்பம் 
உத்திரம் 1ஆம் பாதம்: அமைதி
 
 
கன்னி
அவ்வப்போது முன்கோபப் படுவீர்கள். பெரிய நோய்கள் இருப்பதை போன்ற பிரம்மைகள் வந்து நீங்கும். ஆனாலும் பெரிய பாதிப்புகள் இருக்காது.
உத்திரம் 2, 3, 4: துன்பம்
அஸ்தம்: கஷ்டம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: மகிழ்ச்சி
 
 
துலாம்
பிள்ளைகளின் பிடிவாத குணம் அதிகமாகும். அவர்களை பாதை மாறாமல் பார்த்துக் கொள்வது நல்லது. பிள்ளைகளுடன் இயல்பாகி பேசி பழகுவதற்கும் நீங்கள் அதிக நேரம் ஒதுக்குவது நல்லது.
சித்திரை 3, 4ஆம் பாதம் : செலவு
சுவாதி : துன்பம்
விசாகம் 1, 2, 3: வெற்றி  
 
 
விருட்சிகம்
தாய் வழி உறவினர்களுடன் சின்ன சின்ன மோதல்கள் வரும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பதவி உயர்வு சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம்.  
விசாகம் 4: அலைச்சல்
அனுசம்: இன்பம் 
கேட்டை: கஷ்டம்  
 
 
தனுசு
அதிகார வர்கத்திற்கு நெருக்கமாவீர்கள். சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு தகுந்தாற்போல் நடந்து கொள்வது நல்லது. ஓரளவு வருமானம் உயரும்.
மூலம்: மகிழ்ச்சி 
பூராடம்: இன்பம்
உத்திராடம் 1ஆம் பாதம்: மகிழ்ச்சி
 
 
மகரம்
அதிகாரிகளின் பாராட்டுக்கள் கிடைக்கவில்லையே என்று வருந்துவீர்கள். அலுவலகம் மூலமாக அயல் நாடு சென்று வரும் வாய்ப்பு தேடி வரும். சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும்.
உத்திராடம் 2, 3, 4: லாபம்
திருவோணம்: வெற்றி
அவிட்டம் 1, 2: மகிழ்ச்சி 
 
 
கும்பம்
வேலையில் இருந்து கொண்டே பகுதி நேரவியாபாரம் தொடங்கி குடும்ப வருமானத்தை உயர்த்துவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் மதிப்பும் அதிகரிக்கும். முன் கோபத்தை குறைப்பீர்கள்.
அவிட்டம் 3, 4: மகிழ்ச்சி 
சதயம் : உற்சாகம்
பூரட்டாதி 1, 2, 3: மகிழ்ச்சி
 
 
மீனம்
தங்க ஆபரணங்கள் சேரும். அடிக்கடி பழுதான வாகனத்தை விற்று புதியது வாங்குவீர்கள். புதிய நண்பர்களின் நட்பால் உற்சாகமடைவீர்கள்.
பூரட்டாதி 4: மகிழ்ச்சி 
உத்திரட்டாதி :  இன்பம் 
ரேவதி : மகிழ்ச்சி

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .