2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (17.05.2020) நல்ல திருப்பங்கள் ஏற்படும்!

Editorial   / 2020 மே 17 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேஷம்: பிறருக்கு உதவி புரிவதில் பேரின்பம் அடைவீர்கள். படிப்பில் வெற்றிகள் படிப்படியாய் வரும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்ந்து மகிழ்வர். பணவரவு மற்றும் பெண்களால் இலாபம் ஏற்பட மனம் மகிழும்.

ரிஷபம்: புதிய உத்தியோகமும், உத்வேகமும் ஏற்படும் நாள். பணியில் பணிவும், துணிவும் இருந்தால் முன்னேற்றம் ஏற்படும். பெண்களால் இலாபமும், போகமும் உண்டு.

மிதுனம்: இன்று, தெய்வ நம்பிக்கையும், பாக்கிய விருத்தியும் ஏற்படும். கோவில் திருப்பணிகள் மற்றும் அன்னதானங்கள செய்ய மனம் விழையும். வாழ்க்கையில் வசந்த காலமென நல்ல திருப்பங்கள் ஏற்படும்.

கன்னி: அனைத்து நலன்களும் உண்டாகும். எதிர்பார்த்த வரவுகள் வந்து ஏற்றம் தரும். தக்க தருணத்தில் நல்ல நண்பர்களின் உதவி கிடைக்கும். மனதில் சொந்த வீடு வாங்கும் எண்ணம் உருவாகும்.

மகரம்: இன்று சுமாரான நாள். குடும்பத்தாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடாது இருப்பது நல்லது. தோல்விகளைக் கண்டு துவளாதீர்கள். முயன்றால் வெற்றி நிச்சியம்.

கடகம்: இன்று, அதிகாரிகளிடம் பணிவோடு நடந்தால் பயன் பெறலாம். மனைவியின் கலகத்தால் உறவுகளிடையே உரசல்கள் ஏற்படலாம். பொருள்களை கவனமாகப் பாதுகாத்தால் இழப்பைத் தவிரக்கலாம்.

சிம்மம்: புதிய தொழில் பயிற்சி மற்றும் கல்வியில் தேர்ச்சி ஏற்படும். வாக்கு வன்மையால் சம்பாத்தியம் உயரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் திருப்திகரமான வரவால் சந்தோஷம் நிலவும்.

துலாம்: உங்கள் திறமையை முழுமையாகக் காட்டிச் செயல்பட்டாலும் மேலிடத்தில் திருப்தி இருக்காது. வாகனங்களில் நிதானமாகச் சென்றால் தேவையற்ற விபத்துக்களைத் தவிர்க்கலாம்.

மீனம்: இன்று கட்டுக்கடங்காத செலவுகள் ஏற்படும். வாகனங்களில் செல்கையில் வேகத்தைக் குறைத்து, விபத்தினைத் தவிர்க்கவும். உறவுகளிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க முயலவும்.

தனுசு: பணவரவுகள் அதிகரிப்பதால் புதிய உற்சாகம் பிறக்கும். குழந்தைகள்பால் அன்பும், அவர்களின் முன்னேற்றத்தில் ஆர்வமும் ஏற்படும். மனைவியின் பணிவிடைகள் மகிழ்ச்சி அளிக்கும்.

விருச்சிகம்: வீட்டில் திருட்டைத் தவிர்க்க எச்சரிக்கையுடன் இருத்தல் அவசியம். தாயின் உடல்நிலையில் அக்கறை தேவை. காரியத்தடைகள் மற்றும் பணயிழப்புகள் ஏற்படலாம்.

கும்பம்: ஆரோக்கியம் மேம்படும். படுக்கை சுகங்கள், நல்ஆடைகள், நண்பர்கள் அருகாமை, நல்அதிர்ஷ்டம் என எல்லா நலன்களும் தரும் ஏற்றமிகு நாள். வருமானம் சேரும் வளம் மிக்க நாள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .