2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

’20,000 தொடக்கம் 30,000 வரையான ஐ.எஸ் ஆயுததாரிகள்’

Editorial   / 2018 ஓகஸ்ட் 14 , பி.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு தோல்வியடைந்ததுடன், வெளிநாட்டவர்கள் இணைவது தடைப்பட்டுள்ளபோதும் ஈராக், சிரியாவில் 20,000 தொடக்கம் 30,000 வரையான ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு உறுப்பினர்கள் இருப்பதாக ஐக்கிய நாடுகளின் தடைகள் கண்காணிப்பு அறிக்கை தெரிவிக்கின்றது.

நேற்று  வெளியிடப்பட்ட இவ்வறிக்கை, 3,000 தொடக்கம் 4,000 வரையான ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுததாரிகள் லிபியாவைத் தளமாகக் கொண்டிருப்பார்கள் என எதிர்பார்ப்பதுடன் சில முக்கியமான உறுப்பினர்கள் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறுகின்றது.

ஈராக், சிரியாவில் ஏறத்தாழ இரண்டு நாடுகளிலும் சரிசமமாகப் பிரிக்கப்பட்டு ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவில் 20,000 தொடக்கம் 30,000 வரையான தனிநபர்கள் இருப்பதாக ஐக்கிய நாடுகளின் அறிக்கைக்கு அங்கத்துவ நாடுகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, மேற்குறிப்பிட்ட எண்ணிக்கையில் இயங்குநிலையிலுள்ள பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டு ஆயுததாரிகளும் இன்னும் இருப்பதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2014ஆம் ஆண்டு ஆரம்பத்தில் சிரிய நகரமான றக்காவைக் கைப்பற்றியிருந்த ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு தனது தலைநகரான றக்காவை பிரகடனப்படுத்தியிருந்தது. சில மாதங்களுக்குப் பின்னர் ஈராக்கிய நகரான மொசூலை ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு கைப்பற்றியிருந்த நிலையில், 2014ஆம் ஆண்டு ஜூனிலி அங்கிருந்து இஸ்லாமியப் பேரரசொன்றை ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவின் தலைவர் அபு பக்கர் அல்-பக்தாதி பிரகடனப்படுத்தியிருந்தார். அடுத்த ஓராண்டுக்குள் கிழக்கு சிரியாவின் பெரும்பாலான பகுதிகளையும் ஈராக்கின் மூன்றிலொரு பகுதியையும் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு கைப்பற்றியிருந்தது.

இந்நிலையில், 2017ஆம் ஆண்டில், றக்கா உள்ளிட்ட அனைத்து பிரதான நகரங்களிலிருந்தும் ஐ.எஸ்.ஐ.எஸ் தோற்கடிக்கப்பட்டதுடன், இவ்வாண்டு ஜனவரியில் சிரியாவின் சிறிய இடங்களுக்குள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

ஐ.எஸ்.ஐ.எஸ், அல் கொய்தா குறித்து ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் குறித்த சுயாதீனமான அறிக்கை ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபைக்கு சமர்ப்பிக்கப்படுவது வழக்கமாகும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .