2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

55 சிரிய அகதிகள் மீட்கப்பட்டனர்

Shanmugan Murugavel   / 2021 ஜனவரி 10 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அட்ரியாட்டிக் கடலின் கொந்தளிப்பான கடற்பரப்பில் சிக்கியிருந்ததைத் தொடர்ந்து 55 சிரிய அகதிகள் அல்பேனிய அதிகாரிகளால் தரைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இவர்கள் இத்தாலியை அடைய முயன்றிருந்தனர்.

அல்பேனியத் தலைநகர் திரானாவிலிருந்து 100 கிலோ மீற்றர் தெற்காகவுள்ள விஜொஸா ஆற்றுக் கழிமுகத்தில், மிதக்கக்கூடிய படகொன்றில் மூன்று மணித்தியாலங்களாக நேற்று முன்தினம் மோசமான வானிலையால் சிறுவர்களை உள்ளடக்கிய குறித்த அகதிகள் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இதில், மூன்று சிறுவர்கள் உட்பட 16 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .