2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

8.4 மில். பேர் பஞ்சத்தில் சிக்கும் அபாயம்

Editorial   / 2017 டிசெம்பர் 13 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

யேமனில் போரில் ஈடுபட்டுவரும் தரப்புகள், உதவிகள் செல்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தாவிடின், பஞ்சம் ஏற்படக்கூடிய நிலை நெருங்கிவிட்டது எனவும், 8.4 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவர் எனவும், ஐக்கிய நாடுகள் எச்சரித்துள்ளது.

ஈரானுக்கு ஆதரவான ஹூதி ஆயுததாரிகளை எதிர்த்துப் போரிட்டுவரும், சவூதி அரேபியா தலைமையிலான இராணுவக் கூட்டணி, யேமனுக்கான உதவிகள் செல்வதற்குத் தடை விதித்துள்ளது. யேமனிலிருந்து சவூதி அரேபியாவின் றியாத் நோக்கி வீசப்பட்ட எறிகணையைத் தொடர்ந்தே, இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சுமார் ஒரு மாதகாலமாக, இத்தடை அமுலில் காணப்படுகிறது.

இந்நிலை தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த, ஐ.நாவின் யேமனுக்கான மனிதாபிமான இணைப்பாளர் ஜேமி மக்கோல்ட்ரிக், தடையின் அளவு, தற்போது குறைவடைந்துள்ளது என ஏற்றுக்கொண்டுள்ள போதிலும், யேமனின் நிலைமை, இன்னமும் மோசமான நிலையிலேயே காணப்படுகிறது எனத் தெரிவித்தார்.

“எரிபொருள், உணவு, மருந்துகள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தி, துறைமுகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை காரணமாக, உதவிகளை வேண்டிநிற்கும் மக்களின் எண்ணிக்கை, சடுதியாக அதிகரித்துள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், “பஞ்சத்திலிருந்து ஒரு படி அருகில் இருக்கின்ற 8.4 மில்லியன் பேர் உள்ளிட்ட மில்லியன்கணக்கான யேமனியர்களின் வாழ்க்கை, சுகாதாரம், பாதுகாப்பான குடிநீர், உணவு, உறைவிடம், போஷாக்கு உதவி ஆகியவற்றை வழங்குவதற்கான எமது தன்மையில் தங்கியுள்ளது” என்றும் குறிப்பிட்டார்.

அவரது இந்தக் கருத்து, பஞ்சத்தால் பாதிக்கப்படும் ஆபத்தை எதிர்நோக்கியிருக்கும் யேமனியர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதைக் காட்டுகிறது. இதற்கு முன்னைய ஐ.நா அறிக்கைகள், சுமார் 8 மில்லியன் யேமனியர்கள், இவ்வாபத்தை எதிர்நோக்குகின்றனர் எனக் குறிப்பிட்டிருந்தன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .