2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வியட்நாமை மொலவே புயல் தாக்கியதில் 13 பேர் பலி; 40 பேரைக் காணவில்லை

Shanmugan Murugavel   / 2020 ஒக்டோபர் 29 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வியட்நாமின் மத்திய மாகாணமான குவாங் நாமின் கிராமப்புற பகுதிகளை நேற்று தாக்கிய நிலச்சரிவுகளில் 13 பேர் உயிரிழந்ததுடன், 40 பேரைக் காணவில்லை.

இந்நிலையில், மொலவே புயலால் ஏற்பட்ட மழையாலான நிலச்சரிவுகளையடுத்து தப்பித்தோரைத் தேடுவதற்கு நூற்றுக்கணக்கான படைவீரர்களை பாரிய உபகரணங்களுடன் வியட்நாம் அனுப்பியதாகத் தெரிவித்த அந்நாட்டு அரசாங்கம், மோசமான வானிலையால் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.

மொலவே புயலால் மில்லியன் கணக்கானோர் மின்சாரமில்லாமல் இருப்பதோடு, 56,000 வீடுகள் பாதிப்படைந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கரைக்குத் திரும்பும்போது படகுகள் மூழ்கியதையடுத்து 26 மீனவர்களையும் காணவில்லை.

இதேவேளை, 700 மில்லி மீற்றர் வரையான கடும் மழையானது மத்திய வியட்நாம் பகுதிகளில் நாளை வரை தொடரும் என அந்நாட்டு வானிலை முகவரகம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .