2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘அணு, ஏவுகணைத் திட்டங்களை வடகொரியா மேம்படுத்தியது’

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 09 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வடகொரியாவானது சர்வதேசத் தடைகளை மீறி கடந்தாண்டில் தனது அணு, ஏவுகணைத் திட்டங்களைப் பேணியதுடன் மேம்படுத்தியதாகவும், இணையவழி ஹக்கிங் மூலம் திருடப்பட்ட 300 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் மூலம் அவற்றுக்கு நிதியளித்துள்ளதாக றொய்ட்டர்ஸால் நேற்று பார்வையிடப்பட்ட இரகசிய ஐக்கிய நாடுகள் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

ஏவுகணை முனைப் பொருள்களை வடகொரியா தயாரித்ததாகவும், அணு நிலையங்களைப் பேணியதாகவும், ஏவுகணைக் கட்டமைப்பை இற்றைப்படுத்தியதாகவும், இத்திட்டங்களுக்கு வெளிந்நாடுகளிலிருந்து தொடர்ந்து பொருள்களையும், தொழில்நுட்பத்தையும் எதிர்பார்த்ததாக, சுயாதீன தடைக் கண்காணிப்பாளர்களால் தயாரிக்கப்பட்ட குறித்த அறிக்கை தெரிவிக்கின்றது.

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையின் வடகொரிய தடைகள் செயற்குழுவுக்கான வருடாந்த அறிக்கையே இதுவாகும்.

இந்நிலையில், வடகொரியா மீதான தற்போதிருக்கின்ற அழுத்த தெரிவுகள், எவ்வித எதிர்கால இராஜதந்திரம் தொடர்பாக நட்புறவு நாடுகளுடன் முழு மீளாய்வொன்று உள்ளடங்கலாக, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகமானது வடகொரியாவுக்கு புதிய அணுகுமுறையொன்றைத் திட்டமிடுவதாக இராஜங்கத் திணைக்களப் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .