2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அணுசக்தி அமைப்புடன் ஒத்துழைப்பைக் குறைக்கப் போவதாக மிரட்டுகிறது ஈரான்

Editorial   / 2018 ஜூலை 06 , மு.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐக்கிய நாடுகளின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்புடனான ஒத்துழைப்பைக் குறைக்கப் போவதாக, ஈரான் ஜனாதிபதி ஹஸன் றௌஹானி எச்சரித்துள்ளார். ஈரானுக்கெதிரான புதிய தடைகளை, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ளதைத் தொடர்ந்தே, இவ்வெச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.  

ஈரானுக்கெதிரான கடுமையான நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக எச்சரித்து, ஜனாதிபதிப் பதவிக்கு வந்த டொனால்ட் ட்ரம்ப், வல்லரசு நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட அணுவாயுத ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். அதன் பின்னர், ஈரான் மீதான தடைகளை, அவர் தொடர்ச்சியாக விதித்து வருகிறார்.  

இந்நிலையிலேயே, ஐ.நா அணுசக்தி கண்காணிப்பு அமைப்பின் தலைவரை, நேற்று முன்தினம் (04) சந்தித்த ஜனாதிபதி றௌஹானி, அவ்வமைப்புடனான ஒத்துழைப்பைக் குறைக்கப்போவதாக, நேரடி எச்சரிக்கையை வழங்கியுள்ளார்.  

ஈரான் அணுவாயுத ஒப்பந்தத்தின்படியே, ஈரான் மீதான தடைகளை, வல்லரசு நாடுகள் நீக்கியிருந்த நிலையில், ஐ.அமெரிக்கா மாத்திரம், அவ்வொப்பந்தத்திலிருந்து விலகி, தடைகளை விதித்து வருகிறது. அவ்வொப்பந்தத்தின் அடிப்படையிலேயே, அணுசக்தி கண்காணிப்பு அமைப்புடன் இணைந்துச் செயற்படுவதற்கு ஈரான் சம்மதித்திருந்த நிலையில், அவ்வொத்துழைப்பைக் குறைக்கப் போவதாகவே, தற்போது எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. அணுவாயுத ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஈரான் செயற்படுகிறதா என்பதை, ஐ.நா அணுவாயுதக் கண்காணிப்பு அமைப்பே கண்காணிக்க வேண்டுமென்ற நிலையில், அதனுடனான ஒத்துழைப்பைக் குறைக்கப் போவதா, ஈரான் எச்சரித்துள்ளமை, ஈரான் அணுவாயுத ஒப்பந்தத்தின் எதிர்காலம் தொடர்பான கேள்விகளை எழுப்பியுள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .