2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அமெரிக்காவின் மத சுதந்திர அறிக்கையில் பா.ஜ.க மீது அதிருப்தி

Editorial   / 2019 ஜூன் 23 , பி.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாரதிய ஜனதாக் கட்சியைச் சேர்ந்த சில மூத்த தலைவர்கள், சிறுபான்மைச் சமூகத்துக்கு எதிராக அவ்வப்போது கருத்துக்களை வெளியிடும் செயற்பாட்டில் ஈடுபடுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

2018ஆம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திர அறிக்கையை, அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையிலேயே, மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சில இந்து அமைப்புகள், சிறுபான்மைச் சமூகத்தினருக்கு எதிராக குழுத் தாக்குதல்களை, கடந்த 2018ஆம் ஆண்டு முதல் நடத்தியுள்ளது என்றும் மேலும், இந்தியாவில், மாட்டு இறைச்சி தடை செய்யப்பட்டுள்ள பெரும்பாலான மாநிலங்களில், பசு பாதுகாவலர்களால் அரங்கேற்றப்பட்ட வன்முறை சம்பவங்களைத் தடுக்க மத்திய அரசாங்கம் தவறியுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு இறைச்சிக்காக பசுக்கள் கொல்லப்படுவதாக பரவிய வதந்திகள் காரணமாக, சிறுபான்மை சமூகத்தினர் தொடர்ந்து தாக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .