2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘இம்மாதத்தில் தாக்குதலுக்கு திட்டமிட்டுகிறது இந்தியா’

Editorial   / 2019 ஏப்ரல் 09 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானில் இம்மாதம் தாக்குதல் நடத்த இந்தியா திட்டமிடுகிறது என தமது அரசாங்கம் நம்பத் தகுந்த புலனாய்வைக் கொண்டிருப்பதாக பாகிஸ்தானின் வெளிநாட்டமைச்சர் ஷா மெஹ்மூட் குரேஷி நேற்று முன்தினம் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், பாகிஸ்தானின் தென் நகரமான முல்தானிலிருந்து செய்தியாளர்களிடம் கதைக்கும்போது குறித்த கருத்தை வெளிப்படுத்திய ஷா மெஹ்மூட் குரேஷி, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பினர்களின் தூதுவர்களுக்கு மேற்கூறப்பட்ட திட்டம் குறித்து இரண்டு நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டதாகவும் கூறினார்.

புதிய திட்டமொன்றை இந்தியா தயாரித்துள்ளதாக தாங்கள் நம்பத் தகுந்த புலனாய்வைக் கொண்டிருப்பதாகவும், திட்டமிடுதல் நடைபெறுவதாகவும், தங்களது தகவலின்படி பாகிஸ்தானுக்கெதிரான இன்னொரு தாக்குதல் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், இது இம்மாதம் 16ஆம் திகதிக்கும் 20ஆம் திகதிக்கும் இடையில் இடம்பெறலாம் என ஷா மெஹ்மூட் குரேஷி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், போர் வெறியை ஷா மெஹ்மூட் குரேஷி தூண்டுவதாக தனது பதிலளிப்பில் இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்தியாவின் ஆளுகைக்குட்பட்ட காஷ்மிரில், பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட ஜைஷ்-ஈ-மொஹமட் குழுவால் உரிமை கோரப்பட்ட இவ்வாண்டு பெப்ரவரியில் இடம்பெற்ற தாக்குதலில் 40 துணைப்படை பொலிஸார் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்குமிடையிலான உறவு சீரற்றதாகவே காணப்படுகிறது.

குறித்த தாக்குதலில் எந்த வகிபாகத்தையும் பாகிஸ்தான் மறுத்துள்ளதுடன், நம்பத்தகுந்த ஆதாரம் இந்தியாவால் வழங்கப்படுமிடத்து விசாரணையில் ஒத்துழைப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .