2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’இம்மாதம் பிரெக்சிற் இல்லாவிட்டால் தேர்தலை ஆதரிக்கவுள்ள தொழிலாளர் கட்சி’

Editorial   / 2019 ஒக்டோபர் 10 , பி.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியாவை இம்மாத இறுதிக்குள் வெளியேற்றும் தனது உறுதிமொழியை பிரித்தானியப் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் நிறைவேற்றாவிட்டால், அடுத்த மாதம் 26ஆம் திகதி பொதுத் தேர்தலொன்றை பிரித்தானியாவின் பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி ஆதரிக்கவுள்ளது என சண் பத்திரிகை நேற்று  செய்தி வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்றத்தைக் கலைத்து, தேர்தலொன்றுக்குச் செல்வதற்கான வாக்களிப்பொன்றை பிரதமர் பொரிஸ் ஜோன்சன் இம்மாதம் 21ஆம் திகதி முன்மொழிந்தால் நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தலொன்றுக்குச் செல்ல தொழிலாளர் கட்சி இணங்கும் என சண் பத்திரிகை தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான பேச்சுவார்த்தைகள் முறிவடைந்தால் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது தாமதாக்கப்படுகையில் இம்மாதம் 21ஆம் திகதியே பிரித்தானிய நாடாளுமன்றம் கூடுவதற்கான வாய்ப்புக் காணப்படுகின்றது.

நிரந்தர கால நாடாளுமன்றச் சட்டத்தின்படி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு 25 முழு வேலை நாட்களுக்குள் தேர்தலொன்று நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .