2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இரண்டு கொரியாக்களும் இராணுவமட்டப் பேச்சு

Editorial   / 2018 ஓகஸ்ட் 01 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரியத் தீபகற்பத்தில் மீண்டும் அதிகரித்துவரும் பதற்றம், வடகொரியா தொடர்பான ஐக்கிய அமெரிக்காவின் புதிய கருத்து ஆகியவற்றுக்கு மத்தியில், வடகொரியாவும் தென்கொரியாவும், நேற்று (31) சந்தித்து, இராணுவரீதியிலான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டன.

ஜூன் மாதத்துக்குப் பின் இடம்பெற்ற, இவ்வகையான இரண்டாவது பேச்சுவார்த்தையாக இது அமைந்ததோடு, இராணுவ சூனிய வலயத்தில் அமைந்துள்ள பன்முன்ஜொம் கிராமத்தில், இது இடம்பெற்றது.

இரு நாட்டுத் தலைவர்களும், இவ்வாண்டு ஏப்ரலில் சந்தித்து, அனைத்து வகையான ஆத்திரமூட்டல் நடவடிக்கைகளையும் நிறுத்தி, பதற்றத்தை இல்லாது செய்வது என முடிவெடுத்திருந்த நிலையில், அதை அடிப்படையாகக் கொண்டே, இச்சந்திப்பு இடம்பெற்றது.

இரு நாடுகளுக்குமிடையிலான உறவு, இவ்வாண்டில் சிறப்பான முன்னேற்றத்தைக் கண்டிருந்த போதிலும், கடந்த சில நாட்களாக, வடகொரிய அரச ஊடகத்தின் கடுமையான விமர்சனத்துக்கு, தென்கொரியா உள்ளாகியிருந்தது. குறிப்பாக, இரு நாடுகளுக்குமிடையிலான உறவை மேம்படுத்துவதற்கு, துரிதமாகப் பணியாற்றுவதற்குத் தென்கொரியா தவறிவிட்டது என்பது, அவ்வூடகத்தில் குற்றச்சாட்டாகக் காணப்பட்டது.

அதேபோல், இச்சந்திப்பு நேற்று இடம்பெற்ற நிலையில், வடகொரியாவின் உத்தியோகபூர்வப் பத்திரிகையான றொடொங் சின்முன், நேரத்தை வீணாக்கும் செயற்பாட்டில், தென்கொரியா ஈடுபடுகிறது எனக் குற்றஞ்சாட்டியிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .