2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘இஸ்லாமிய ஆயுததாரிகளால் 71 படைவீரர்கள் கொல்லப்பட்டனர்’

Editorial   / 2019 டிசெம்பர் 12 , பி.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாலியுடனான எல்லைக்கு அருகே நைகரிலுள்ள இராணுவ முகாமொன்றின் மீதான தாக்குதலில் 71 படைவீரர்களை, இஸ்லாமிய ஆயுததாரிகள் கொன்றதாக அந்நாட்டு இராணுவப் பேச்சாளர் கேணல் பெளபகார் ஹஸன் நேற்று தெரிவித்துள்ளார்.

மேற்கு நைகர் நகரான இனேட்ஸிலுள்ள தளமொன்றை மூன்று மணியாத்திலங்களாக கடந்த செவ்வாய்க்கிழமை மாலையில் சில நூற்றுக்கணக்கான ஆயுததாரிகள் தாக்கியதாக அரச தொலைக்காட்சியில் பெளபகார் ஹஸன் கூறியுள்ளார்.

இப்பகுதியிலேயே இவ்வாண்டு மே, ஜூலை மாதம் நடைபெற்ற இரண்டு தாக்குதல்களில் ஏறத்தாழ 50 நைஜீரியப் படைவீரர்களை ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவின் மேற்கு ஆபிரிக்கக் கிளை கொன்றிருந்தது.

இந்நிலையில், ஆட்லறி ஷெல்கள், தாக்குதல் வாகனங்கள், எதிரிகளால் பயன்படுத்தப்பட்ட அரிதானதொரு சண்டையாக குறித்த சம்பவம் காணப்பட்டதாக பெளபகார் ஹஸன் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 12 படைவீரர்கள் காயமடைந்ததாகவும், குறிப்பிடமுடியாத எண்ணிக்கையுடையோர் காணாமல்போயுள்ளதாகவும் கூறிய பெளபகார் ஹஸன், குறிப்பிட்ட எண்ணிக்கையான ஆயுதாரிகளும் கொல்லப்பட்டதாகக் கூறியுள்ளார்.

இந்நிலையில், 30 படைவீரர்களை இன்னும் காணவில்லை என தம்மை அடையாளங்காட்ட விரும்பாத இரண்டு பாதுகாப்புத் தகவல்மூலங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, எகிப்துக்கான விஜயத்தை இடையில் முடித்துக் கொண்ட ஜனாதிபதி மஹமடெள இஸ்ஸெளஃபெள, நேற்று மாலையில் நைகரில் தரையிறங்கியதாக டுவீட்டொன்றில் அவரது அலுவலகம் கூறியுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .