2024 மே 08, புதன்கிழமை

ஈராக்கிலிருந்து பணியாளர்களை வெளியேற்றும் ஐ. அமெரிக்கா

Editorial   / 2019 மே 17 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரானிடமிருந்தான அறிந்து கொண்ட ஆபத்துக்கள் தொடர்பான அக்கறையில், ஈராக் தலைநகர் பக்தாத்திலுள்ள ஐக்கிய அமெரிக்க தூதரகத்தைச் சேர்ந்த ஐக்கிய அமெரிக்கப் பணியாளர்களை ஹெலிகொப்டர்கள் நேற்று முன்தினம் வெளியேற்றியுள்ளன.

ஈராக்கிய தகவல் மூலமொன்று, பக்தாத்தின் கடுமையாகப் பாதுகாக்கப்படும் பச்சை வலயத்துக்குள் உள்ள இராஜதந்திர தகவல் மூலமொன்றின் தகவல்படி, பக்தாத்திலுள்ள தைகிரிஸ் நதிக்கருகிலுள்ள பாரிய ஐக்கிய அமெரிக்க தூதரக வளாகத்திலிருந்து நேற்று முன்தினம் முழுவதும் ஹெலிகொப்டர்கள் புறப்பட்டுள்ளன.

பக்தாத் விமான நிலையத்திலுள்ள இராணுவத் தளமொன்றை நோக்கி ஐக்கிய அமெரிக்க பணியாளர்கள் சென்றதாக ஈராக்கியத் தகவல் மூலம் தெரிவித்திருந்த நிலையில், வெளியேற்றுதல் முடிவடைந்துள்ளதாக ஐக்கிய அமெரிக்க அதிகாரி நேற்று முன்தினமிரவு கூறியிருந்தார்.

இந்நிலையில், பக்தாத்திலுள்ள தமது தூதரகத்தினதும், அரைச் சுயாட்சி குர்திஸ்தான் பிராந்தியத்தின் தலைநகரான இர்பிலுள்ள தமது துணைத் தூதரகத்திலுமுள்ள பணியாளர்கள் பாதுகாப்பு அக்கறைகள் காரணமாக உடனடியாக வெளியேற்றப்பட்டதாக ஐக்கிய அமெரிக்க இராஜங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எவரும் உரிமை கோரியிருக்காத வளைகுடாவிலுள்ள எண்ணெய்க் கப்பல்கள் நான்கின் மீதான கடந்த ஞாயிற்றுக்கிழமை நாசகாரி தாக்குதல், தமது எண்ணெய் நிலையங்கள் இரண்டை ஆயுதந்தரித்த ட்ரோன்கள் தாக்கியதான சவூதி அரேபியாவின் கடந்த செவ்வாய்க்கிழமை அறிவிப்பானது ஐக்கிய அமெரிக்காவும், ஈரானும் மோதலொன்றை நோக்கி நகர்கின்றன என்றவாறான கவனயீர்ப்புக்களை ஏற்படுத்தியிருந்தன. இதிலும், எண்ணெய்க் கப்பல்கள் மீதான தாக்குதலை ஈரான் ஊக்கப்படுத்தியாக ஐக்கிய அமெரிக்க தகவல் மூலங்கள் நம்புகின்றன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X