2024 மே 08, புதன்கிழமை

’உயிருடன் வைத்திருப்பதற்கு லீட்டர் கணக்கான ஒட்சிசன் வழங்கப்பட்டது’

Editorial   / 2020 மே 03 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரித்தானியப் பிரதமர் பொரிஸ் ஜோன்சனை உயிருடன் வைத்திருப்பதற்கு லீட்டர் கணக்கான ஒட்சிசன் வழங்கப்பட்டதாக த சண் இணையத்தளமுடனான இன்றைய நேர்காணலில் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பிரித்தானியத் தலைநகர் இலண்டனிலுள்ள சென். தோமஸ் வைத்தியசாலையில் தான் களித்த வாரமானது ஏனையவர்கள் பாதிக்கப்படுவதை நிறுத்தும், மீண்டும் பிரித்தானியாவை அதன் கால்களில் நிற்க வைக்கும் ஆர்வத்தைத் தூண்டியதாக பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கூறியுள்ளார்.

இந்நிலையில், பிரதமர் பொரிஸ் ஜோன்சனும், தானும் தங்களது ஆண் குழந்தையை வில்ஃபிரட் லோரி நிக்கொலஸ் ஜோன்சன் எனப் பெயரிட்டுள்ளதாக பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் வருங்கால மனைவி கரி சைமொன்ட்ஸ் வெளிப்படுத்தியுள்ளார்.

குறித்த பெயர்களானவை பிரதமர் பொரிஸ் ஜோன்சன், கரி சைமொன்ட்ஸின் பேரன்மார், COVID-19-உடன் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் வைத்தியசாலையிலிருக்கும்போது சிகிச்சையளித்த வைத்தியர்கள் இருவருக்கு மரியாதையளிக்கும் முகமாக இருக்கின்றன என இன்ஸ்டாகிராம் பதிவொன்றில் கரி சைமொன்ட்ஸ் எழுதியுள்ளார்.

தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து பிரதமர் பொரிஸ் ஜோன்சன் வெளியேறிய சில வாரங்களில் கடந்த புதன்கிழமை குறித்த குழந்தை பிறந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நேர்காணலின்போது கணினிகளுடன் வயர்களால் பிணைக்கப்பட்டு தவறான திசையில் அடையாளங் காட்டும் கருவிகள் செல்வதை பிரதமர் பொரிஸ் ஜோன்சன் வெளிப்படுத்தியுள்ளார்.

இவ்வாண்டு மார்ச் மாதம் 26ஆம் திகதி பிரதமர் பொரிஸ் ஜோன்சனுக்கு COVID-19 கண்டுபிடிக்கப்பட்டதுடன், 10 நாட்களின் பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மறுநாள் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X