2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

​ எதியோப்பியாவில் துணை இராணுவப் படைகளால் 40 பேர் கொல்லப்பட்டனர்

Editorial   / 2018 ஓகஸ்ட் 14 , பி.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கிழக்கு எதியோப்பியாவில் இறுதியாக இடம்பெற்ற இனப் பிரிவினையால் ஏற்பட்ட வன்முறையாக கடந்த வாரயிறுதியில் 40 பேர் துணை இராணுவப் படைகளால் கொல்லப்பட்டுள்ளதாக ஒரோமியா பிராந்திய நிர்வாகத்தின் பேச்சாளர் நெகெரி லெஞ்சோ நேற்றுத் தெரிவித்துள்ளார்.

சோமாலியுவுடனான எல்லையிலும் ஒரோமியா மாகாணங்களிலும் முதன்முறையாக கடந்தாண்டு செப்டெம்பரில் வெடித்த வன்முறையால் ஏறத்தாழ ஒரு மில்லியன் அளவான மக்கள் இடம்பெயர்ந்திருந்த நிலையில், இவ்வாண்டு ஏப்ரலளவில் வன்முறை குறைவடைந்துள்ளது.

இந்நிலையிலேயே, எல்லை கடந்து வந்த சோமாலிய பிராந்திய துணை இராணுவப் படையொன்றின் கடுமையாக ஆயுதந்தரித்த உறுப்பினர்கள் ஒரோமியாவின் கிழக்கு ஹராகே மாவட்டத்தில் தாக்குதல் நடத்தியதாக நெகெரி லெஞ்சோ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மேலும் கருத்துத் தெரிவித்த நெகெரி லெஞ்சோ, லியு படைகள் என துணை இராணுவப் படைவீரர்களை அடையாளப்படுத்தி அவர்கள் ஏன் கடந்த சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் தாக்குதல் நடத்தினார்கள் என இன்னும் தெரியாது. ஆனால், உயிரிழந்தவர்கள் அனைவரும் ஒரோமோ இனத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியும் என்று கூறினார்.

ஒரு வாரத்துக்கு முன்பு, சோமாலியாவின் பிராந்தியத் தலைநகரான ஜிஜிகாவிலுள்ள சிறுபான்மையினத்தவர்களின் சொத்துக்கள் குழுக்களால் கொள்ளையிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், லியு படைகள், மத்திர அரசாங்கத்தின் கட்டளைகளிலேயே தாக்குதல்களில் பங்கெடுப்பதாகத் தெரிவித்துள்ள நெகெரி லெஞ்சோ, தங்களை மத்திய அரசாங்க சட்டரீதியற்ற முறையில் இராஜினாமா செய்ய வைப்பதாகக் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .