2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஏழு இராணுவத்தினருக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறை

Editorial   / 2018 ஏப்ரல் 12 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

மியான்மாரின் ராக்கைன் மாநிலத்தில், றோகிஞ்சா முஸ்லிம்கள் 10 பேரைப் படுகொலை செய்த குற்றம் தொடர்பில், மியான்மார் இராணுவத்தைச் சேர்ந்த 7 பேருக்கு, 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு செப்டெம்பரில் இடம்பெற்ற இச்சம்பவம், கடந்தாண்டு இறுதியில் வெளியாகியிருந்தது. இதை விசாரணை செய்துவந்த, றொய்ட்டர்ஸின் ஊடகவியலாளர்கள் இருவர், டிசெம்பரிலேயே கைதாகியிருந்தனர். அச்செய்தி, இவ்வாண்டு பெப்ரவரியில் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, இவ்விடயம் அம்பலமாகியிருந்தது. ஆனால், கைதுசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள், இதுவரை விடுவிக்கப்பட்டிருக்கவில்லை.

இராணுவத்தினரிடம் சரணடைந்த இந்த 10 றோகிஞ்சாக்களும், அங்குள்ள இராணுவத்தினராலும் பௌத்தர்களாலும் கொல்லப்பட்டிருந்தனர் என வெளிப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், அதில் சம்பந்தப்பட்ட 4 இராணுவத்தினர், இராணுவத்திலிருந்து நிரந்தரமாகவே வெளியேற்றப்பட்டதுடன், அவர்களின் பதவி நிலைகளும் பறிக்கப்பட்டன. ஏனைய 3 இராணுவத்தினருக்கும், அவர்களின் பதவி நிலை குறைக்கப்பட்டு, இராணுவத்திலிருந்து நிரந்தரமாக வெளியேற்றப்பட்டனர். இவர்கள் எழுவருக்கும், தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் எதிரான விசாரணைகள், தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என அறிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .