2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஐ.நா அறிக்கையை விமர்சிக்கிறது அமெரிக்கா

Editorial   / 2018 பெப்ரவரி 02 , மு.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஸ்‌ரேலின் சட்டவிரோதக் குடியேற்றங்களோடு தொடர்புடைய நிறுவனங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அறிக்கையை விமர்சித்துள்ள ஐக்கிய அமெரிக்கா, நேரமும் வளங்களும் வீணாக்கப்பட்டன என்றும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த ஐக்கிய நாடுகளுக்கான ஐ.அமெரிக்கத் தூதுவர் நிக்கி ஹேலி, ஐ.நாவின் இந்த அறிக்கை, இஸ்‌ரேலுக்கெதிரான எதிர்ப்புணர்வைக் காட்டுவதோடு, ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் ஆணைக்கு அப்பாற்பட்டதாக இவ்விடயம் காணப்படுகிறது என்றும் தெரிவித்தார்.

நிறுவனங்களின் பெயரைப் பட்டியற்படுத்தாமையை, “விவேகமானது” என நிக்கி ஹேலி ஏற்றுக் கொண்டாலும், “இந்த அறிக்கை வெளியானது என்பது, ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் இஸ்‌ரேலுக்கெதிரான மாற்ற இயலா எண்ணத்தை வெளிப்படுத்துகிறது” என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து அவர், “இஸ்‌ரேலுக்கெதிரான பாகுபாட்டுக்கு எதிராக, ஐ.அமெரிக்கா அதீதமாகத் தொடர்ந்தும் செயற்படும் என்பதோடு, பேரவையில் ஏற்படுத்தப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் தொடர்பாகவும் முயற்சிகளை மேற்கொள்ளும்” எனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .