2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘ஐக்கிய அமெரிக்கா வெளியேறுகிறது’

Editorial   / 2020 ஜூலை 08 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து அடுத்தாண்டு ஜூலை மாதம் ஆறாம் திகதி ஐக்கிய அமெரிக்கா வெளியேறவுள்ளதாக ஐக்கிய நாடுகள் நேற்று  தெரிவித்துள்ளது.

இது தொடர்பான அறிவுறுத்தலை ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிடமிருந்து பெற்றதைத் தொடர்ந்தே மேற்குறித்த அறிவிப்பை ஐக்கிய நாடுகள் வெளியிட்டுள்ளது.

கொவிட்-19 பரவலின்போது சீனாவின் கைப்பாவையொன்றாக உலக சுகாதார ஸ்தாபனம் மாறியதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஒரு மாதத்துக்கு முன்னதாக குறித்த முடிவை அறிவித்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து ஐக்கிய அமெரிக்காவின் வெளியேற்றத்துக்கு ஓராண்டு அறிவித்தலை வழங்க வேண்டும் என்பதுடன், 1948ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க காங்கிரஸ் தீர்மானமொன்றின்படி ஐக்கிய அமெரிக்காவின் அனைத்து நிலுவைகளையும் செலுத்த வேண்டும்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் இணையத்தளத்தின்படி உலக சுகாதார ஸ்தாபனத்துக்கு மதிப்பிடப்பட்ட பங்களிப்புகளில் 200 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைச் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய அமெரிக்காவில் இவ்வாண்டு நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தனது ஜனநாயகக் கட்சி போட்டியாளரான ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் உப ஜனாதிபதி ஜோ பைடனால் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தோற்றகடிக்கப்பட்டால், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் குறித்த முடிவு நடைமுறைக்கு வர முன்னர் மாற்றப்பட்டலாம்.

உலக சுகாதார ஸ்தாபனத்துக்கான நிதியளிப்பை இவ்வாண்டு ஏப்ரல் மாதம் நிறுத்தியிருந்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இவ்வாண்டு மே மாதம் 18ஆம் திகதி சீர்திருத்தங்களுக்கு பணியுமாறு உலக சுகாதார ஸ்தாபனத்துக்கு 30 நாள்கள் கடிதத்தை வழங்கியிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .