2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘ஐக்கிய அமெரிக்காவுக்கு இந்தியாவின் உதவி தேவை’

Editorial   / 2017 ஒக்டோபர் 19 , மு.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஆப்கானிஸ்தான் விவகாரத்தில், அமெரிக்காவுக்கு இந்தியா உதவ வேண்டும் என, ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே கூறியுள்ளார். 

அமெரிக்கா-இந்தியா நட்புறவு கவுன்ஸில் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். 

அவர் மேலும் கூறுகையில்,  

“பயங்கரவாதத்துக்கு எதிராகவும் அவர்களின் புகலிடங்களை ஒழிக்கவும், ஆப்கானிஸ்தான் மற்றும் தெற்காசியாவில் அமெரிக்கா, கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. பயங்கரவாதிகளின் கைகளில் அணு ஆயுதம் செல்லாமல் இருக்க, இராணுவம் மற்றும் அனைத்து பொருளாதார ஒத்துழைப்பு நாடுகள் அனைத்தையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.  

“இந்தியாவுடன், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். பயங்கரவாதிகளை அறுவடை செய்யும் பாகிஸ்தானுக்கு எதிராக, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். அமெரிக்காவுக்கு, ஒரு காலத்தில் பாகிஸ்தான் சிறந்த நண்பனாக இருந்தது. இதை நாங்கள் மதித்தோம். ஆனால், பாகிஸ்தான் அரசாங்கமாக இருந்தாலும் அல்லது வேறு எந்த அரசாங்கமாக இருந்தாலும் சரி, அமெரிக்கர்களைத் தாக்கும் பயங்கரவாதிகளுக்கு புகலிடம் தருவதை, ஒரு போதும் பொறுத்து கொள்ள முடியாது. இதனை இந்தியாவும் பாகிஸ்தானும் புரிந்து கொள்ள வேண்டும்.  

“ஆப்கானிஸ்தானின் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சி பணிகளில், அமெரிக்காவுக்கு, இந்தியா உதவ வேண்டும். ஆப்கனிஸ்தானின் நிலைத்தன்மைக்கு, இந்தியா ஏற்கெனவே முக்கிய பங்காற்றி வருகிறது. அந்த பிராந்தியத்தில், இரு நாடுகளும் எங்களுக்கு முக்கிய நட்பு மற்றும் கூட்டாளி நாடுகள்.  

“உள்கட்டமைப்பு மற்றும் நிதி விவகாரத்தில் மட்டுமல்லாமல், பாகிஸ்தானையும் கருத்தில் கொண்டு, ஆப்கனிஸ்தான் விவகாரத்தில், அமெரிக்காவுக்கு இந்தியா உதவ வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .