2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஒரு மாதகால மோதலில் 115 பேர் பலி; 383 பேர் காயம்

Editorial   / 2018 செப்டெம்பர் 25 , மு.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

லிபியத் தலைநகர் திரிபோலியின், எதிரெதிர் ஆயுதக்குழுக்க ளுக்கிடையில் சுமார் ஒரு மாதகாலமாக இடம்பெற்ற மோதல்களின் விளைவாக, குறைந்தது 115 பேர் கொல்லப்பட்டனர் எனவும், 383 பேர் காயமடைந்தனர் எனவும், அந்நாட்டின் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

கனியட் அல்லது ஏழாவது பிரிகேட் என்றழைக்கப்படும் குழுவுக்கும் திரிபோலி புரட்சிகர பிரிகேட் என்ற ஆயுதக்குழுவுக்கும் இடையிலேயே, இம்மோதல்கள் இடம்பெற்றன.

திரிபோலியும் மேற்கு லிபியாவும், ஐக்கிய நாடுகளால் ஆதரவளிக்கப்படும் அரசாங்கத்தால் ஆளப்படுகிறது. அரசாங்கத்துக்கு, ஆயுதக்குழுக்கள் ஆதரவு வழங்குகின்றன. நாட்டின் கிழக்குப் பகுதி, அரசாங்கத்துக்கு எதிரான குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. லிபியாவின் சர்வாதிகாரத் தலைவராக இருந்த முஹம்மர் கடாபி, 2011ஆம் ஆண்டில் வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாடு தொடர்ந்தும் வன்முறைக்குள் சிக்கிக் காணப்படுகிறது.

கனியட்டும் வேறு சில சில ஆயுதக்குழுக்களும், திரிபோலிக்கு வெளியே இருந்து, திரிபோலி மீதான தாக்குதலை, இவ்வாண்டு ஓகஸ்ட் இறுதிக்காலப்பகுதியில் ஆரம்பித்திருந்தன. திரிபோலியில் ஆண்டுவரும் ஆயுதக்குழுக்களின் தளபதிகள், அதிக செல்வத்தையும் அதிகாரத்தையும் ஆடம்பர வாழ்க்கையையும் கொண்டுள்ளனர் என வெளியான தகவல்களைத் தொடர்ந்தே, இத்தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், திரிபோலியின் தெற்குப் பகுதியிலுள்ள வீடுகள் மீது குண்டுகள் வீசித் தாக்கப்பட்டதோடு, வாகனங்கள் எரிக்கப்பட்டு, கடைகள் அழிக்கப்பட்டு, வன்முறைகள் கட்டவிழ்க்கப்பட்டன.

இந்த மோதல்கள் காரணமாக, நகரிலுள்ள அநேகமான மின் நிலையங்கள் செயற்பாட்டை இழந்துள்ளதோடு, திரிபோலியின் பிரதான விமான நிலையம், ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மீதான தாக்குதல்கள், இன்னமும் தொடர்கின்ற போதிலும், நிலைமை கட்டுப்பாட்டுக்குள் காணப்படுகிறது என, அரசாங்கத்துக்கு ஆதரவான ஆயுதக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

எனினும், காயமடைந்தோரில் பலரது நிலைமை, கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .