2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘ஒருத்தனாவது சாவணும்டா’

Editorial   / 2018 மே 23 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்நாட்டின் தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலைக்கெதிராகப் போராட்டம் நடத்திய மக்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், குறைந்தது 11 பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்த நிலையில், வேண்டுமென்றே அத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 

நேற்று (23) வெளியான காணொளியொன்றின் அடிப்படையில், பொலிஸ் வானொன்றுக்கு மேல் ஏறும் இரண்டு பொலிஸார், ஆர்ப்பாட்டக்காரர்களை இலக்குவைத்துச் சுடுவது காண்பிக்கப்படுகிறது. 

அதில், முதலில் ஒருவர் மேலே ஏறி, துப்பாக்கிச் சூட்டை நடத்திய பின்னர், இன்னொருவர் மேலே ஏறுகிறார். இரண்டாவதாக ஏறியவரிடம் துப்பாக்கியை அவர் கொடுத்த பின்னர், “ஒருத்தனாவது சாவணும்டா” என அவர் சொல்வது, காணொளியில் பதிவாகியுள்ளது. 

ஏற்கெனவே, இத்தாக்குதல்கள் தொடர்பாக எதிர்ப்புகளைச் சந்தித்த தமிழ்நாட்டு அரசாங்கத்துக்கு, இது பெரும் தலையிடியாக மாறியுள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .