2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கடும் வெள்ளத்தால் நேபாளத்தில் 115 பேர் பலி

Editorial   / 2017 ஓகஸ்ட் 16 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெற்காசிய நாடான நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்குக் காரணமாக, கடந்த வாரத்துக்குள், குறைந்தது 115 பேர் பலியாகியுள்ளனர் என, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மீட்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடுமையான வெள்ளமும் அதன் காரணமாக ஏற்படும் மண்சரிவுகளும், மக்களைப் பெரிதும் பாதித்துவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நிவாரணப் பணியாளர்களின் தகவலின்படி, மேலும் 38 பேரைக் காணவில்லை எனவும், நாட்டின் 75 மாவட்டங்களில் 26 மாவட்டங்கள், வெள்ளம் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளன அல்லது மண்சரிவின் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் குறிப்பிடப்படடுகிறது.

தங்களுடைய முக்கியமான ஆவணங்களையும் சொத்துகளையும் சுமந்தபடி, நெஞ்சு அளவுக்குக் காணப்படும் வெள்ள நீரில், மக்கள் நடந்து செல்வதை, தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட காட்சிகள் காட்டின.

இந்த நிலைமை தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த, நேபாள பொலிஸ் பேச்சாளர் புஷ்கர் கார்க்கி, “வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களைக் காப்பாற்றவும் நிவாரணப் பணிகளிலும், நாங்கள் இப்போது கவனஞ்செலுத்துவோம். சாப்பிடுவதற்கும் அணிவதற்கும் மக்களிடம் எதுவுமில்லை. ஆகவே, உண்ணுவதற்காக அவர்களுக்கு ஏதாவது வழங்கி, உயிர்களைக் காப்பாற்ற வேண்டும்” என்று தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .