2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கன மழையால் உயிரிழப்புகள் அதிகரிப்பு

Editorial   / 2019 ஓகஸ்ட் 08 , பி.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக, 16 பேர் பலியாகியுள்ளனர்.

இதேவளை, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 140,000 பேர், ​பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றப்பட்டுள்ளனர் என, பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது என்றும் இதனால், பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த மழை வீழ்ச்சி, இன்னும் மூன்று நாள்களுக்கு நீடிக்கும் என்றும் இதனால், பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கையில், வான் படையினர் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேவேளை, மாநிலத்தின் பல பகுதிகளிலுள்ள பாடசாலைகளும் அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளது என்றும் எதிர்வரும் வாரங்களில் பாடசாலைகளைத் திறப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, மகாராஷ்டிர மாநிலத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த படகொன்று கவிழ்ந்ததில், 9 பேர் பலியாகியுள்ளனர்.

கிருஷ்ணா நதிக்ரையோரத்தில், இன்று (08), இச்சம்பவம் இடம்பெற்றிருந்தது.

குறித்த படகில், 20க்கும் மேற்பட்டோர் பயணித்த நிலையில், 15 பேர், நீந்தி உயிர்த்தப்பியுள்ளனர் என்றும் 9 பேர், நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .