2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

காவிரி நீர் திறப்பு; கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

Editorial   / 2018 ஜூலை 16 , மு.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால், அங்குள்ள அணைகளில் நீர் நிரம்பி வருகிறது.  இந்த நிலையில், கர்நாடக அணைகள் நிரம்பி வழிவதால், தமிழகத்துக்கு விநாடிக்கு 1 இலட்சம் கன அடி உபரி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

கே.ஆர்.எஸ் அணையில் இருந்து தமிழகத்துக்கு விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி நீர், கபினி அணையில் இருந்து விநாடிக்கு 40 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு உள்ளது.  இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து மேட்டூர் அணை முதல் எடப்பாடி வரை, காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.  இதேபோன்று ஒகேனக்கல் முதல் மேட்டூர் அணை வரையிலான பகுதி மக்களுக்கும், எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

காவிரிக் கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பு நிறைந்த பகுதிக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .