2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

குர்திஷ் பிரிவை அகற்றுவதற்கான ஒப்பந்தத்தை ரஷ்யாவும் துருக்கியும் எட்டின

Editorial   / 2019 ஒக்டோபர் 23 , பி.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

துருக்கியுடனான எல்லையில் இருந்து குர்திஷ் மக்கள் பாதுகாப்புப் பிரிவு போராளிகள் மற்றும் அவர்களது ஆயுதங்களை அகற்றுவதற்காக, நேற்று  இணங்கப்பட்ட ஒப்பந்தமொன்றின் கீழ் வடகிழக்கு சிரியாவில் சிரரிய மற்றும் ரஷ்யப் படைகள் தரையிறக்கப்படவுள்ளன.

நேற்று முன்தினம் முடிவுக்கு வந்த ஐக்கிய அமெரிக்காவின் யுத்தநிறுத்தத்தைத் தொடர்ந்தே குறித்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

அந்தவகையில், ரஷ்யாவின் சோச்சியில் ரஷ்யாவுக்கும், துருக்கிக்கும் இடையே ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தின்படி தமது முன்னைய நட்புறவு குர்திஷ் படைகளுடன் எல்லையில் ரோந்துப் பணி புரிந்த ஐக்கிய அமெரிக்காவை ரஷ்யப் படைகளுடன் சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாட்டின் படைகள் பிரதியிடுகின்றன.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும், துருக்கி ஜனாதிபதி தயீப் எர்டோவானுக்குமிடையிலான குறித்த ஒப்பந்தத்தின் கீழ் துருக்கி எல்லையிலிருந்து 30 கிலோ மீற்றர் வரை மக்கள் பாதுகாப்புப் பிரிவுகளை அகற்ற ரஷ்ய இராணுவப் பொலிஸாரும், சிரிய எல்லைக் காவலர்களும் இன்று ஆரம்பிப்பர் என ரஷ்யாவும், துருக்கியும் கூறியிருந்தன.

இந்நிலையில், வட சிரியாவில் துருக்கி வலியுறுத்திய பாதுகாப்பு வலயத்திலிருந்து குர்திஷ் போராளிகள் முழுமையாக வெளியேறியுள்ளதாக ஐக்கிய அமெரிக்கா தெரிவித்ததாக குறித்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட சில மணித்தியாலங்களில் துருக்கி பாதுகாப்பமைச்சு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், தற்போது நடவடிக்கை இடம்பெறும் பகுதிக்கு வெளியே இன்னொரு நடவடிக்கையை ஆரம்பிக்க வேண்டிய தேவை இல்லை என அறிக்கையொன்றில் துருக்கி பாதுகாப்பமைச்சு தெரிவித்துள்ள நிலையில், பரவலாக விமர்சனத்துக்குள்ளான இம்மாதம் ஒன்பதாம் திகதி ஆரம்பித்த துருக்கியின் வலிந்த தாக்குதல் முடிவுக்கு வருகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .