2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

குவேட்டாவில் குண்டுவெடிப்பு; 7 பொதுமக்கள் உட்பட 15 பேர் பலியாகினர்

Editorial   / 2017 ஓகஸ்ட் 14 , மு.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானின் பலோசிஸ்தான் மாகாணத்தில் அமைந்துள்ள குவேட்டா நகரத்தில், சனநெரிசல் மிக்க சந்தைத் தொகுதிக்கு அண்மையில், நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற குண்டுவெடிப்பொன்றில், 8 படையினர், 7 பொதுமக்கள் என, பொலிஸார் தெரிவித்தனர். மேலும் 40 பேர், இந்தத் தாக்குதலில் காயமடைந்தனர். 

வீதியோரத்தில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த துணை இராணுவப் படையினரை இலக்குவைத்தே, இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. 

“எங்களுக்குக் கிடைத்திருக்கும் தகவல்களின் அடிப்படையில், சுமார் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அத்தோடு சுமார் 40 பேர் காயமடைந்துள்ளனர்” என, பலோசிஸ்தான் மாகாண உள்துறை அமைச்சர் சப்ராஸ் புக்தி தெரிவித்தார். 

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, அப்பகுதியில் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தியுள்ளது என்று தெரிவித்த அவர், வைத்தியசாலைகளும் உயர் எச்சரிக்கையில் வைக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார். 

அங்குள்ள தகவல்களின்படி, மோட்டார் சைக்கிளொன்றில் குண்டுகளை நிரப்பிவந்த தற்கொலைக் குண்டுதாரி, குண்டை வெடிக்க வைத்ததாகக் கூறப்படுகிறது. எனினும், என்ன வகையான தாக்குதல் என்பது, இதுவரையில் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. 

பாகிஸ்தானின் 70ஆவது சுதந்திர தினம், இன்று (14) கொண்டாடப்படவுள்ள நிலையில், அதைக் குழப்பும் நோக்கத்துடனேயே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என, பாகிஸ்தானின் இராணுவத் தளபதி ஜெனரல் குவாமர் ஜாவிட் பஜ்வா தெரிவித்தார். அத்தோடு, இவற்றுக்கெல்லாம் அடிபணியப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். 

இந்தத் தாக்குதல் தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்ட, ஐ.எஸ்.ஐ.எஸ், மோட்டார் சைக்கிளில் சென்ற தற்கொலைக் குண்டுதாரி, 17 படையினரைக் கொன்றார் என்று தெரிவித்தது. ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவுக்கு, ஆப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும், ஆயுததாரிகள் காணப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .