2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கொடியேற்றினார் கமல்ஹாசன்

Editorial   / 2018 ஜூலை 13 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர் கமல்ஹாசனால் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியை, இந்திய தேர்தல் ஆணைக்குழு அங்கிகரித்ததைத் தொடர்ந்து, கொடியேற்றி, புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்களைத் தெரிவுசெய்யும் நிகழ்வு, நேற்று (12) இடம்பெற்றது.

சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில், கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

கட்சியாக அறிவிக்கப்பட்ட பின்னர், நிர்வாகக் குழுவென ஒரு குழு, தற்காலிகமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் நீக்கப்பட்டு, புதிய நிர்வாகக் குழுவினர் அறிவிக்கப்பட்டனர்.

இதன்படி, கட்சியின் தலைவராக, கமல்ஹாசன் தொடரவுள்ளார். துணைத் தலைவராக ஞானசம்பந்தனும், பொதுச் செயலாளராக அருணாச்சலமும், பொருளாளராக சுரேஷும் நியமிக்கப்பட்டனர்.

செயற்குழு உறுப்பினர்களாக கமீலா நாசர், மௌரியா, பாரதி கிருஷ்ணகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

இதன்போது உரையாற்றிய கமல்ஹாசன், “கிராமப் பஞ்சாயத்து, மய்யம் விசில் செயலி என்று, நமது மக்கள் நீதி மய்யம் கட்சி முன்னெடுத்திருக்கும் செயற்பாடுகளை, இன்னும் வலிமையாக, ஒருங்கிணைந்து, ஒற்றுமையுடன், சமூகத்தின் அனைத்துத் தரப்பினரிடமும் எடுத்துச்செல்ல வேண்டிய கடமையும் பொறுப்பும், உங்களுக்கு இருக்கிறது” என, புதிதாகத் தெரிவுசெய்யப்பட்ட நிர்வாகக் குழுவிடம் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .