2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கொவிட்-19 நோயெதிர்ப்பை உருவாக்கிய குரங்குகள்

Editorial   / 2020 மே 21 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

குரங்குகள் மீதான நேற்று  பிரசுரிக்கப்பட்ட ஆராய்ச்சிகளானவை, கொவிட்-19க்கு பாதுகாக்கக்கூடிய நோயெதிர்ப்பை மனிதர்கள் உருவாக்கலாம் என நம்பிக்கையை அளித்துள்ளது.

விஞ்ஞான சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்ட குறித்த ஆராய்ச்சிகளானவை தடுப்புமருந்தொன்றை உற்றுநோக்கியதுடன், கொவிட்-19 தொற்றானது மீண்டும் தொற்று ஏற்படுவதிலிருந்து நோயெதிர்ப்பை வழங்குகிறதா என நோக்கியிருந்தது.

இந்நிலையில், கொவிட்-19-ஐக் கட்டுப்படுத்துவதற்கு மேற்குறித்த இரண்டு கேள்விகளும் முக்கியமானதாகக் காணப்படுகிறது.

இயற்கையான தொற்றிலிருந்து அல்லது தடுப்பு மருந்திலிருந்து கொவிட்-19 நோயெதிர்ப்பை குரங்குகள் உருவாக்கின்றதா என குரங்குகளில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அந்தவகையில், ஒரு ஆராய்ச்சியில் ஒன்பது குரங்குகளுக்கு கொவிட்-19 தொற்று ஏற்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவை கொவிட்-19 குணங்குறிகளைக் காண்பித்திருந்தபோதும் நோயெதிர்ப்பை உருவாக்கி சில நாட்களில் குணமடைந்திருந்தன.

இந்நிலையில், குறித்த குரங்குகளின் நோயெதிர்ப்பைச் சோதிப்பதற்காக 35 நாள்களின் பின்னர் மீண்டும் குறித்த குரங்குகளுக்கு கொவிட்-19 தொற்று ஏற்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவை எவ்விதக் குணங்குறிகளைக் காண்பிக்கவில்லை.

இதேவேளை, இரண்டாவது ஆராய்ச்சியில் 35 குரங்குகளுக்கு தடுப்பு மருந்து வழங்கப்பட்டு ஆறு வாரங்களின் பின்னர் அவற்றுகு கொவிட்-19 தொற்றை ஏற்படுத்தியபோது, கொவிட்-19 பாதிப்பை ஏற்படுத்தாதவாறு நோயெதிர்ப்பை அவை உருவாக்கியிருந்தன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .