2024 மே 14, செவ்வாய்க்கிழமை

சனா மீது விமானத் தாக்குதல்களை நடத்திய கூட்டணி

Shanmugan Murugavel   / 2021 மார்ச் 21 , பி.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

யேமன் தலைநகர் சனாவிலுள்ள, ஈரானுடன் இணைந்த ஹூதிகளின் இராணுவ இலக்குகளை, ஹூதிகளுடன் போராடும் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டணி, இன்று அதிகாலையில் தாக்கியதாக அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

தென் சனாவில், ஹூதி இராணுவ முகாம்கள் உள்ள பகுதிகள், சனாவுக்கு வடக்காகவுள்ள இராணுவத் தளபாட உற்பத்தி நிலையம் மீது கூட்டணி போர்விமானங்கள் குண்டுத் தாக்குதல்களை நடத்தியதாக, சனாவிலுள்ளவர்கள் கூறியுள்ளனர்.

சனா விமானநிலையம் உள்ளடங்கலாக, சனாவில் கூட்டணி விமானத் தாக்குதல்கள் நடந்ததை, ஹூதிகளின் அல் மஸிராஹ் தொலைக்காட்சியும் செய்தி வெளியிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .