2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சரணடைந்து பிணை பெற்றார் நடராஜன்

Editorial   / 2018 ஜனவரி 12 , மு.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சொகுசு கார் இறக்குமதி மோசடி வழக்கில், சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனைக் கைதியாக சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு, சென்னை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் நேற்று (11) பிணை வழங்கியது. 

 நடராஜன், நேற்று சென்னை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்து, பிணை மனுத்தாக்கல் செய்ததையடுத்தே, அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.  

கடந்த 1994ஆம் ஆண்டு, இலண்டனிலிருந்து லெக்சஸ் என்ற சொகுசு கார் இறக்குமதி செய்ததில் வரிஏய்ப்பு மோசடியில் ஈடுபட்டதாக, சசிகலாவின் கணவர் எம்.நடராஜன், உறவினர் பாஸ்கரன் மற்றும் யோகேஷ் பாலகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் மீது சி.பி.ஐ பொலிஸார் வழக்குப் பதிவு செய்தனர்.  

இந்த வழக்கை விசாரித்த சிபி.ஐ சிறப்பு நீதிமன்றம், இந்த வழக்கில், நடராஜன் உட்பட 4 பேருக்கு, இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை விதித்து, கடந்த 2010ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இந்தத் தண்டனையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது. இதனைத் தொடர்ந்து நடராஜன், பாஸ்கரன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.  

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நடராஜன் மற்றும் பாஸ்கரன் உச்சநீதிமன்றத்தில் தலா ரூ.25 இலட்சம் ரூபாய் வைப்புத்தொகையாகச் செலுத்தி, சி.பி.ஐ நீதிமன்றத்தில் சரண் அடைந்து பிணை பெற்றுக்கொள்ளலாம் என உத்தரவிட்டிருந்தது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பாஸ்கரன் ஏற்கெனவே சரணடைந்து பிணை பெற்றுள்ள நிலையில், நேற்று சசிகலாவின் கணவர் நடராஜனும், சரணடைந்து பிணை பெற்றுக்கொண்டுள்ளார்.   

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .