2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சவால்களை எதிர்கொள்வாரா ராகுல் காந்தி?

Editorial   / 2017 டிசெம்பர் 18 , மு.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக, நேற்று முன்தினம் (16) பதவியேற்ற ராகுல் காந்தி, அப்பதவி மூலமாக ஏற்படும் சவால்களை எவ்வாறு எதிர்கொள்வார் என்பது தான், தற்போதுள்ள கேள்வியாக உள்ளது.

இந்தியாவின் பிரதமர்களாக இருந்தவர்களின் மகன், பேரன், கொள்ளுப் பேரன் ஆகிய குடும்பப் பின்னணியைக் கொண்ட ராகுல் காந்தி, நீண்டகாலமாகக் காணப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நேற்று முன்தினம் (16) உத்தியோகபூர்வமாகப் பதவியேற்றார்.

அவரது பதவியேற்பு, காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் ஒன்றாக இருக்கிறது. புதுடெல்லியில் மாத்திரமன்றி, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், அவரது பதவியேற்புக் கொண்டாடப்பட்டது. அக்கொண்டாட்டங்கள் நேற்றும் நீடித்ததோடு, அவரால் நேற்று மாலை ஏற்பாடு செய்யப்பட்ட விருந்து, இக்கொண்டாட்டங்களின் முக்கிய அம்சமாக அமைந்தது.

கொண்டாட்டங்கள் ஒருபக்கமாகவிருக்க, ராகுல் காந்திக்கான சவால்களும் அதிகமாக உள்ளன. நடந்து முடிந்த குஜராத் சட்டமன்றத் தேர்தல்களின் வாக்கெண்ணும் பணி நாளை இடம்பெறவுள்ளது. இது, ராகுல் காந்தியைப் பொறுத்தவரை முக்கியமானது.

ஏற்கெனவே 2014ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலிலும், பிரசாரத்துக்கான தலைவராக ராகுல் காந்தி செயற்பட்ட போதிலும், அத்தேர்தலில் காங்கிரஸுக்குப் படுதோல்வி ஏற்பட்டிருந்தது. ஏனைய தேர்தல்களைத் தொடர்ந்து, குஜராத் தேர்தல், தற்போது முக்கியமானதாக மாறியுள்ளது. கருத்துக்கணிப்புகளின்படி, ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கே வெற்றி கிடைக்குமென எதிர்பார்க்கப்படும் நிலையில், அவ்வாறு வெற்றியை பா.ஜ.க பெறுமாயின், ராகுல் காந்தியின் தலைமைத்துவம் மீதான கேள்விகள், மேலும் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படியான நிலையில், ராகுல் காந்தியின் தலைமைத்துவம், கடுமையான சவாலுக்கு மத்தியிலேயே ஆரம்பிக்குமென்ற நிலையில், அச்சவாலை அவர் எவ்வாறு எதிர்கொள்வார் என்பது தான், தற்போதிருக்கும் கேள்வியாக உள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .