2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சீனாவில் 103 பேர் பலியென அச்சம்

Editorial   / 2017 ஜூன் 26 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவின் தென்மேற்குப் பகுதி மாகாணமான சிச்சுவானில், ஸின்மோ கிராமத்தில், கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய 10 பேர், சடலங்களாக மீட்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் சுமார் 93 பேர், காணாமல் போயுள்ளனர். இவர்கள் அனைவரும், உயிருடன் இருப்பதற்காக வாய்ப்புகள் குறைவு என்றே, சீன அதிகாரிகள் நேற்றுத் தெரிவித்தனர். இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 103ஐயும் தாண்டுமென அஞ்சப்படுகிறது.

இலங்கை நேரப்படி நேற்று முன்தினம் அதிகாலை 3:30 மணியளவில் ஏற்பட்ட இந்த மண்சரிவில், சுமார் 40 வீடுகள் தரைமட்டமாகி, மண்சரிவுக்குள் சிக்கிக் கொண்டன. கடும் மழை காரணமாக, பாறைகள் விழுந்திருந்த நிலையில், பாறைகளுக்குள் சிக்கிக் கொண்டோரைக் காப்பாற்றும் முயற்சியில், மீட்புப் படைகள் ஈடுபட்டன.

நேற்றுவரை கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, மூன்று பேர் மாத்திரமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். தம்பதியொன்றும் அவர்களது ஒரு மாதமே நிறைவான குழந்தையொன்றுமே, இவ்வாறு உயிருடன் மீட்கப்பட்டனர்.

மீட்புப் பணிகள் இடம்பெறும் இடத்தில் காணப்படும் புவிச்சரிதவியல் நிபுணர்களின் கருத்துப்படி, உயிருடன் இருப்போரை இனிமேலும் மீட்கும் வாய்ப்புகள், மிக அரிது என்றே கருதப்படுகிறது.

கிராமத்தின் வான்வழியிலான காட்சிகளின் போது, கிராமம் என்ற ஒன்று இருந்த அடையாளத்தையே காணமுடியவில்லை. அந்தளவுக்கு, மோசமான அழிவாக இது அமைந்துள்ளது.

மீட்புப் பணிகளில் ஈடுபடுவோரை, முழுமையான நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு பணித்த ஜனாதிபதி ஸி ஜின்பிங், அனர்த்தம், எதிர்காலத்தில் நடைபெறாமல் இருப்பதை உறுதிப்படுத்துமாறும் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, மண்சரிவு இடம்பெற்ற இடத்துக்கு அருகில் வசித்த 100க்கும் மேற்பட்டோர், அவ்விடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .