2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சீனாவைக் குற்றஞ்சாட்டும் ஐ. அமெரிக்கா

Editorial   / 2020 மே 14 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொவிட்-19 பரவல் ஆராய்ச்சியில் ஈடுபடும் நிறுவனங்களை சீனாவுடன் தொடர்புடைய ஹக்கர்கள் இலக்கு வைப்பதாக ஐக்கிய அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தடுப்புமருந்துகள், சிகிச்சைகள், சோதனை தொடர்பில் ஆராய்ச்சியில் ஈடுபடும் ஐக்கிய அமெரிக்க குழுக்கள் மீதான ஹக்கிங் முயற்சிகளைத் தாம் அவதானித்துள்ளதாக புலன்விசாரணை கூட்டாட்சிப் பணியகம் (எப்ஃ.பி.ஐ) தெரிவித்துள்ளது.

உள்நாட்டு பாதுகாப்புத் திணைக்களத்தின் பிரிவொன்றான புலன்விசாரணை மற்றும் இணையப் பாதுகாப்பு மற்றும் உட்கட்டமைப்பு மத்திய முகவரகமானது அரிதானதொரு எச்சரிகையை நேற்று விடுத்திருந்தது.

கொவிட்-19 பதிலளிப்பு தொடர்பில் பணியாற்றும் சுகாதாரநலன், மருந்து, ஆராய்ச்சிப் பிரிவுகள் அனைத்தும் அவையே ஹக்கர்களின் பிரதான இலக்குகள் என அறிந்திருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .