2024 மே 09, வியாழக்கிழமை

சொகுசு ஹொட்டல் தாக்குதலில் 18 பேர் பலி; 153 பேர் மீட்பு

Editorial   / 2018 ஜனவரி 22 , மு.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள சொகுசு ஹொட்டலொன்றில், ஆயுததாரிகள் புகுந்து மேற்கொண்ட தாக்குதலில், வெளிநாட்டவர் உட்பட 18 பேர் கொல்லப்பட்டனர் என, அந்நாட்டு உள்துறை அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

நேற்று முன்தினம் ஆரம்பித்த இத்தாக்குதல், 12 மணித்தியாலங்களாக நீடித்ததோடு, நேற்றைய தினமே முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

ஹொட்டலுக்குள் புகுந்த 3 ஆயுததாரிகள், அங்கிருந்தோரைப் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்தனர்.

ஆப்கானிஸ்தானில் காணப்படும் முக்கியமான ஆடம்பர ஹொட்டலான இந்த ஹொட்டல், வெளிநாட்டவர்களிடத்தில் முக்கியத்துவம் பெற்றதாகும். இந்நிலையில், பணயக்கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட 153 பேரில், 40க்கும் மேற்பட்டோர் வெளிநாட்டவர்கள் என, உள்துறை அமைச்சின் பேச்சாளர் நஜீப் டனிஷ் தெரிவித்தார்.

சனிக்கிழமை இரவு நேரத்தில் ஆரம்பிக்கப்பட்ட இத்தாக்குதலில், ஆயுதங்களுடன் வந்தவர்கள், பணியாளர்கள் மீதும் தங்கியிருந்தோர் மீதும், சரமாரியாகத் தாக்குதல் நடத்தினர் என, சம்பவத்தை நேரில் கண்டோர் தெரிவித்தனர்.

மிகவும் அதிகமான பாதுகாப்பு ஏற்பாடுகள் கொண்ட ஹொட்டலாக, இது கருதப்படுகிறது. ஹொட்டலுக்குள் செல்வதற்கு, குறைந்தது 3 பாதுகாப்புச் சாவடிகளைக் கடந்துசெல்ல வேண்டும் என்ற நிலையில், ஆயுததாரிகள் எவ்வாறு சென்றனர் என்பதே, தற்போதைய கேள்வியாக உள்ளது.

இத்தாக்குதலுக்கு, தலிபான் குழு உரிமை கோரியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X