2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஜப்பானில் 11 பேர் பலி

Editorial   / 2018 பெப்ரவரி 02 , மு.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானின் வடக்குப் பகுதியிலுள்ள முதியோர் இல்லத்தில் திடீரெனப் பரவிய தீ காரணமாக, 11 பேர் பலியாகினர். நிதி நீதியாக வறுமையானவர்களுக்கான இல்லத்திலேயே, இத்தீ பரவியுள்ளது.

3 மாடிகளைக் கொண்ட இக்கட்டடத்தில், பனி படர்ந்த வானிலைக்கு மத்தியிலும், தீ பரவியிருப்பதையும், அதை அணைப்பதற்குத் தீயணைப்புப் படை வீரர்கள் முயல்வதையும், தொலைக்காட்சிக் காட்சிகள் வெளிப்படுத்தின.

உள்ளூர் நிறுவனமொன்றால் நடத்தப்பட்டு வந்த இவ்வில்லத்தில், 16 பேர் காணப்பட்டனர் எனவும், அவர்களுள் 8 ஆண்கள், 3 பெண்கள் என 11 பேரே பலியாகினர் எனவும், அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஏனைய 5 பேரும், சிறு காயங்களுடன் உயிர்தப்பினர்.

இலங்கை நேரப்படி நேற்று முன்தினம் மாலை 5.20 மணியளவில் இந்தத் தீ ஏற்பட்டதோடு, இதை அணைப்பதற்கு நேரமெடுத்தது எனத் தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .