2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஜெயலலிதா மரணம்: சசிகலா தரப்பு, குறுக்கு விசாரணை செய்ய அனுமதி

Editorial   / 2018 பெப்ரவரி 01 , மு.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதாவின் மரணத்தில் ஏற்பட்ட சர்ச்சை தொடர்பாக, சசிகலா தரப்பு குறுக்கு விசாரணை செய்ய, விசாரணை ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளது. மேலும், விசாரணை ஆணைக்குழுவின் பணிகள், 15 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.  

முன்னாள் முதலமைச்சரின் மரணத்தில் சர்ச்சை இருப்பதாக எழுந்த புகாரையடுத்து, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னை எழிலக வளாகத்தில் செயற்படும் ஆறுமுகசாமி விசாரணை ஆணைக்குழுவின் முன், சசிகலா சார்பில் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் நீதிபதி ஆறுமுகசாமி முன்பு ஆஜராகி, அனைவரையும் குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தார்.  

சசிகலா தரப்பு கோரிக்கையை நிராகரித்த விசாரணை ஆணைக்குழு, இதுவரை 20க்கும் மேற்பட்டோரை விசாரித்துள்ளது. அனைவரிடமும் விசாரணை நடத்தினால், விசாரணையை முடித்துக்கொள்வதற்கு, நீண்ட நாட்கள் ஆகும் என்பதால், விசாரணை ஆணைக்குழுவில் இனி ஆஜராகி விளக்கமளிப்பவர்களிடம் குறுக்கு விசாரணை நடத்திக் கொள்ளலாம் என்று கூறி, கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. 

இந்தநிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆஜராகி விளக்கமளித்தவர்களிடம் குறுக்கு விசாரணை நடத்த, சசிகலா தரப்புக்கு, விசாரணை ஆணைக்குழு தற்போது அனுமதியளித்துள்ளது. 

மேலும், ஆணைக்குழுவில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தவர்கள் தந்த தகவல்களைக் கொடுக்கவும் விசாரணை ஆணைக்குழு ஒப்புக்கொண்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .