2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

டென்வர் வீடுகளுக்கு மேல் இயந்திர சிதைவுகளைக் கொட்டிய விமானம்

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 21 , பி.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தனது இயந்திரங்களிலொன்று மேலெழுந்த பின்னர் இயங்காத நிலையில், ஐக்கிய அமெரிக்காவின் டென்வருக்கு அருகிலுள்ள வசிப்பிட பகுதியொன்றுக்கு மேலால் போயிங்க் ஜெட்டொன்று சிதைவுகளைக் கொட்டியுள்ளது.

போயிங்க் 777 ரக குறித்த விமானமானது 231 பயணிகளையும், 10 சிப்பந்திகளையும் கொண்டிருந்ததுடன், பாதுகாப்பாக டென்வர் விமானநிலையத்தில் மீண்டும் தரையிறங்க முடிந்துள்ளது. எவரும் காயமடைந்திருக்கவில்லை.

இயந்திரத்தின் முற்பகுதியொன்று, வீடொன்றின் முன் தோட்டத்தில் இருக்கும் புகைப்படங்களை புரூம்பீல்ட் நகரத்திலுள்ள பொலிஸார் பிரசுரித்திருந்தனர்.

இந்நிலையில், விமானம் மேலெழுந்த உடனே பாரிய வெடிப்பொன்று ஏற்பட்டதாக விமானத்திலிருந்த பயணிகள் தெரிவித்துள்ளனர்.

ஹொனொலுலுக்குச் செல்லவிருந்த 328 யுனைட்டெட் எயார்லைன்ஸ் விமானத்தில் வலதுகை இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதாக மத்திய விமானப்போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இச்சம்பவமானது இன்று அதிகாலை 1.30 மணியளவில் நிகழ்ந்திருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .