2024 மே 09, வியாழக்கிழமை

’ட்ரம்பின் பிரசார முகாமுக்கும் ரஷ்யாவுக்கு தொடர்பில்லை எனக் கூறவில்லை’

Editorial   / 2019 ஜனவரி 18 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் 2016ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசார முகாமுக்கும் ரஷ்யாவுக்கும் தொடர்பில்லை என ஒருபோதும் கூறவில்லை என ட்ரம்பின் வழக்கறிஞர் றூடி கில்யானி நேற்று முன்தினம் தெரிவித்துள்ளார்.

மாறாக, ட்ரம்புக்கும் ரஷ்யாவுக்கும் தொடர்பில்லை எனவே கூறியதாக றூடி கில்யானி தெரிவித்துள்ளர். சி.என்.என் தொலைக்காட்சியின் குமோ பிறைம் டைம் நிகழ்விலேயே மேற்படி கருத்தை வெளிப்படுத்திய றூடி கில்யானி, ட்ரம்பின் 2016ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசார முகாமிலிருந்த ஏனையவர்கள் ரஷ்யாவுடன் பணியாற்றினார்களான என தனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார்.

தான் ஜனாதிபதியான பின்னர் ரஷ்யாவின் பிரதிநிதியாக ட்ரம்ப் செயற்படுகிறாரா என்பது தொடர்பாக விசாரணையொன்றை எவ்.பி.ஐ ஆரம்பித்துள்ளதென நியூயோர்க் டைம்ஸ் இணையத்தளம் தெரிவித்ததுடன், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடனான தனது கலந்துரையாடல்களை மறைக்க வழமைக்கு மாறான விடயங்களை ட்ரம்ப் மேற்கொண்டா என வொஷிங்டன் போஸ்ட் இணையத்தளமும் தெரிவித்திருந்தன. இதைத் தொடர்ந்து தான் ரஷ்யாவுக்காக ஒருபோதும் பணியாற்றவில்லையென கடந்த செவ்வாய்க்கிழமை ட்ரம்ப் வலியுறுத்தியமையைத் தொடர்ந்தே மேற்குறித்த கருத்து வெளியாகியுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X