2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நவாஸுக்கு மீண்டும் ஆப்பு

Editorial   / 2018 பெப்ரவரி 23 , மு.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் ஆளுங்கட்சியின் தலைவர் பொறுப்பை, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப் வகிக்க முடியாது என, அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக, பிரதமர் பதவியிலிருந்து கடந்தாண்டு நீக்கப்பட்ட ஷரீப், கட்சித் தலைமை வகிக்கும் வகையில், ஆளுங்கட்சியால், அந்நாட்டுச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

எனினும், பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட அரசியல்வாதி ஒருவர், கட்சித் தலைமைப் பொறுப்பை வகிக்க முடியாது என உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், கட்சியின் தலைமைப் பொறுப்பில் நவாஸ் ஷரீப் இருக்கும் அனைத்து ஆவணங்களையும் அழித்துவிடுமாறு உத்தரவிட்டார்.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் மேலவைக்கான தேர்தல், அடுத்த மாதம் நடைபெறவிருந்தது. ஆனால், அதிரடியாக வழங்கப்பட்டுள்ள இத்தீர்ப்புக் காரணமாக, அது ஒத்திவைக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .