2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நாட்டை விட்டு வெளியேறிய மாலைதீவுகள் தேர்தல்கள் ஆணைக்குழுவினர்

Editorial   / 2018 ஒக்டோபர் 12 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாலைதீவுகளின் ஜனாதிபதி அப்துல்லா யமீனின் ஆதரவாளர்களிடமிருந்தான அச்சுறுத்தல்கள் என்று கூறிய மாலைதீவுகள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஐந்து உறுப்பினர்களில் நான்கு பேர் மாலைதீவுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களின் வீடுகளுக்கு முன்னால் திரண்ட யமீனின் ஆதரவாளர்கள், எதிரணியிடமிருந்து கையூட்டுப் பெற்றதாக அவர்களை அச்சுறுத்தியதுடன், குற்றஞ்சாட்டியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் அஹ்மட் ஷரீவ் நேற்றுத் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் யமீன் அதிர்ச்சித் தோல்வியடைந்த நிலையில், குறித்த தேர்தல் முடிவை அவரது மாலைதீவுகளின் முன்னேற்றக் கட்சி உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் சவாலுக்குட்படுத்தியதைத் தொடர்ந்தே மேற்குறித்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், கருத்துத் தெரிவித்துள்ள மாலைதீவுகள் முன்னேற்றக் கட்சி, எவ்வாறு தேர்தலை ஆணைக்குழு நடத்தியதென தேசிய ரீதியாக விமர்சனமிருக்கையில் ஆணைக்குழுவின் உறுப்பினரொருவரே நாட்டில் இருப்பது ஏமாற்றத்தையளிப்பதாகக் கூறியுள்ளது.

கடந்த மாதம் 23ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில், 16 சதவீதமான வாக்குகளால் எதிரணி வேட்பாளர் இப்ராஹிம் மொஹமட் சொலிஹிடம் யமீன் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், குறித்த தேர்தல் முடிவானது ஐக்கிய அமெரிக்கா, சீனா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்டதாக பரவலாக அங்கிகரிக்கப்பட்டதுடன், தேர்தலுக்கு மறுநாள் யமீன் தோல்வியை ஏற்றுக்கொண்டபோதும் அதன்பின்னர் மோசடி இடம்பெற்றதாகத் தெரிவிக்கின்றார்.

எவ்வாறாயினும், தனது பதவிக்காலம் முடியும் வரை அடுத்த மாதம் 17ஆம் திகதி பதவியில் இருக்கப் போவதாகத் தெரிவித்துள்ள யமீன், மோசடிக்கான ஆதாரங்களை வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .