2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நேபாளத்தில் ஆற்றுக்குள் பஸ் வீழ்ந்தது: 17 பேர் கொல்லப்பட்டனர்

Editorial   / 2019 நவம்பர் 04 , பி.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேபாளத்தில் அளவுக்கதிகமானோரைக் கொண்டிருந்த பஸ்ஸொன்று மலை நெடுஞ்சாலையிலிருந்து விலகி ஆறொன்றுக்குள் வீழ்ந்ததில் 17 பேர் கொல்லப்பட்டதுடன், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக பொலிஸ் அதிகாரி மாதவ் கஃப்லே இன்று தெரிவித்துள்ளார்.

திஹார் கொண்டாட்டங்களிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த மக்களால் பச் நிறைந்திருந்ததாகவும், நெடுஞ்சாலையை விட்டு நேற்று  விலக முன்னர் இயந்திரப் பிரச்சினையொன்றைக் கொண்டிருந்தது போலத் தோன்றுவதாக மாதவ் கஃப்லே மேலும் கூறியுள்ளார்.

காயமடைந்தவர்களில் 21 பேர் மருத்துவ சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவாறு இன்று காணப்பட்டிருந்தனர்.

பாரிய சத்தமொன்றை பயணிகள் கேட்டதாகத் தெரிவித்த மாதவ் கஃப்லே, நெடுஞ்சாலையிலிருந்து விலகி 20 மீற்றர் கீழுள்ள சண்கொஷி ஆற்றுக்குள் பஸ் விழ முன்னர் சுக்கான் இயங்கவில்லை போலத் தென்படுவதாகக் கூறியுள்ளார்.

நேபாளத் தலைநகர் காத்மண்டுவிலிருந்து 120 கிலோ மீற்றர் கிழக்காகவுள்ள இடமொன்றிலேயே விபத்து இடம்பெற்றுள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .