2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘பாகிஸ்தானுக்குப் பாடம் கற்பிக்க வேறு வழிகளும் உண்டு’

Editorial   / 2017 ஜூன் 28 , பி.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாகிஸ்தானுக்கு நல்லதொரு பாடத்தைக் கற்பித்துக்கொடுப்பதற்கு, துல்லியமாக இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல்களை விட, மிகவும் சிறப்பான வழிமுறைகள் இந்தியாவிடம் உள்ளன என்று, இராணுவப் பணியாட்தொகுதியின் பிரதானி ஜெனரல் பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.  

“இலகுவான யுத்தமொன்றைக் கொண்டு செல்வதாக, பாகிஸ்தான் நினைத்துக்கொண்டு இருக்கின்றது. ஆனால், (துல்லியமாக இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல்களை விட) எம்மிடம், மிகவும் பயனுள்ள யுத்திகள் உள்ளன. எம்முடைய இராணுவத்தினர், காட்டுமிராண்டித்தனமானவர்கள் அல்லர். தலைகளைச் சேர்க்கவேண்டும் என்ற எண்ணம், எனக்கு இல்லை. காரணம், நாம், ஒழுக்கமான படைகள்” என்று, கடந்த மே மாதம் 1ஆம் திகதி, இரண்டு இந்திய இராணுவத்தினர், தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை மேற்கோள்காட்டி, அவர் கூறினார்.  

​இதேவேளை, காஷ்மிரின் பிரிவினைவாதக் குழுவான ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் சிரேஷ்ட தலைவரான சையட் சலாஹுதீனை, பூகோள பயங்கரவாதியாக வவைப்படுத்துவதாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில், எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். 

ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தின் தலைவர் சலாவுதீனை, அமெரிக்கா, சர்வதேச பயங்கரவாதியாகப் பிரகடனம் செய்திருந்தது.  

“பாகிஸ்தான், அவரைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளதா என்பதை, நான் பொறுத்திருந்தது அவதானித்துக்கொண்டே இருக்கின்றேன்” என்று அவர் கூறினார்.  

காஷ்மிர் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றமை தொடர்பில் அவர் தெரிவித்த போது, “அமைதி நிலவினால் மாத்திமே, பேச்சுவார்த்தை நடத்த முடியும். இராணுவம் என்ற ஒன்றுக்கு, தொழிலைச் செய்ய வேண்டும் என்று ஒன்று உள்ளது. எனவே, மீண்டும் அமைதி நிலவுவதை, நாம் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். என்னுடைய பாதுகாப்புப் படையினரைத் தாக்கமாட்டோம் என்ற உறுதிப்பாட்டை வழங்கும் நபருடனேயே, நான் பேச்சுவார்த்தை நடத்துவேன். அந்த நாளன்று, தனிப்பட்ட முறையில், நான் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராகவுள்ளேன்” என்று அவர் மேலும் கூறினார்.    

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .