2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘பிரெக்சிற் ஒப்பந்தம் தோற்கடிக்கப்படுவது அரசாங்கத்தை கவிழ்க்கும்’

Editorial   / 2018 டிசெம்பர் 10 , பி.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் (பிரெக்சிற்) தனது ஒப்பந்தத்தை நாடாளுமன்றம் நிராகரிக்குமானால், ஐரோப்பிய ஒன்றியத்திலேயே பிரித்தானியா இருக்குமென்றும் தொழிலாளர் கட்சியை ஆட்சிக்கும் கொண்டு வந்து விடுமென்றும் ஐக்கிய இராச்சியப் பிரதமர் தெரேசா மே நேற்று  தெரிவித்துள்ளார்.

பிரெக்சிற் ஒப்பந்தம் தொடர்பாக நாளை இடம்பெறவுள்ள நாடாளுமன்ற வாக்கெடுப்பில் தெரேசா மேயின் அரசாங்கம் பாரிய தோல்வியைத் தளுவும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற நிலையிலேயே அவரின் மேற்குறித்த கருத்து வெளியாகியுள்ளது.

இந்நிலையில், நாளை இடம்பெறவுள்ள வாக்கெடுப்பை தாமதப்படுத்துமாறும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏனைய 27 தலைவர்களுடனும் நாளை மறுநாளும் அதற்கடுத்த நாளும் இடம்பெறும் சந்திப்புக்கு முன்னராக பெல்ஜியத்தின் பிரஸெல்ஸுக்கு சென்று பிரித்தானியாவுக்கு சாதகமான மேலதிக விடயங்களைப் பெறுமாறு தனது அமைச்சரவையிடமிருந்து தெரேசா மே அழுத்தத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறெனினும், வாக்கெடுப்பு நாளை இடம்பெறும் என பிரெக்சிற் செயலாளர் ஸ்டீவன் பார்க்கிளே தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், பிரெக்சிற் வாக்கெடுப்பு நடைபெற்ற ஒரு மாதத்தில் பதவிக்கு வந்த தெரேசா மே, தனது மிகப்பெரிய அரசியல் நெருக்கடியை தற்போது எதிர்கொள்கிறார்.

தனது கன்சவேர்ட்டிவ் கட்சியிலுள்ள பிரெக்சிற் ஆதரவாளர்களிடமிருந்து எதிர்ப்பை எதிர்கொள்கின்ற மே, ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிப்பதற்கு ஆதரவானவர்களிடமிருந்து இரண்டாவது பிரெக்சிற் வாக்கெடுப்பொன்றை நடத்துமாறும் அல்லது தற்போதிருப்பதை விட பலமான ஐரோப்பிய ஒன்றிய, ஐக்கிய இராச்சிய உறவுகளை உடைய ஒப்பந்தத்தை பெறுமாறு தாக்குதல்களுக்கு உள்ளாகுகின்றார்.

அந்தவகையில், மே மேலே தெரிவித்த கருத்து, அவரது முன்னாள் வெளிநாட்டமைச்சர் பொரிஸ் ஜோன்சன் போன்றோரால் தலைமை தாங்கப்படும் கடும்போக்கு கன்சவேர்ட்டின் கட்சியினரை எதிர்கொள்வதற்காக முன்வைக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .