2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

புதிய சட்டத்தின்படி ஓமான் மன்னருக்கு அடுத்ததாக அவரது மூத்த மகன்

Shanmugan Murugavel   / 2021 ஜனவரி 13 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஓமானின் அடுத்த மன்னராக, நேற்று பிரசுரிக்கப்பட்ட புதிய அடிப்படைச் சட்டமொன்றின்படி தற்போதைய மன்னர் ஹைதம் பின் தாரிக் அல்-சைட் மூத்த மகன் டிஹி யஸன் பின் ஹைதம், அவருக்கு அடுத்ததாக மன்னராகவுள்ளார்.

குறித்த சட்டமானது முடிக்குரிய இளவரசர் என்ற புதியதொரு பதவியை உருவாக்கியுள்ளதோடு, மன்னருக்கு அடுத்ததாக அவரது மூத்த மகனுக்கு மன்னர் பதவி செல்வதையும் உருவாக்கியுள்ளது.

அரசமைப்பு மாற்றத்துக்கான திட்டங்களை மன்னர் ஹைதம் நேற்று முன்தினம் அறிவித்ததோடு, புதிய அடிப்படைச் சட்டமானது நேற்று முன்தினம் உத்தியோகபூர்வ அரசிதழில் பிரசுரிக்கப்பட்டிருந்தது.

கடந்தாண்டு ஓகஸ்ட் மாதத்தில் கலாசார, விளையாட்டு, இளைஞர் அமைச்சராக 30 வயதான டிஹி யஸன் பெயரிடப்பட்டு ஓமானின் வயது குறைந்த அமைச்சராகியிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .