2024 மே 11, சனிக்கிழமை

பெய்ரூட்டில் பாரிய குண்டுவெடிப்பு: 10 பேர் பலி; நூற்றுக்கணக்கானோர் காயம்

Editorial   / 2020 ஓகஸ்ட் 04 , பி.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் மத்திக்கு அருகிலான பாரிய குண்டு வெடிப்பொன்றில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதுடன், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

லெபனானின் துறைமுகப் பகுதியில் வெடிபொருள்கள் வைத்திருக்கப்படும் பகுதியிலேயே குண்டு வெடிப்பு இடம்பெற்றதாக லெபனான் அரச செய்தி முகவரகமான என்.என்.ஏயும், இரண்டு பாதுகாப்பு தகவல்மூலங்களும் தெரிவித்துள்ளன. இந்நிலையில் குறித்த பகுதியில் இரசாயனங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாக மூன்றாவது பாதுகாப்பு தகவல் மூலமொன்று தெரிவித்துள்ளது.

குறைந்தது 10 சடலங்கள் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் தகவல்மூலமொன்றும், மருத்துவ தகவல்மூலமொன்றும் தெரிவித்துள்ளன. இதேவேளை, சிகிச்சைக்காக நூற்றுக்கணக்கானோர் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக லெபனானிய செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், எதனால் தீ ஏற்பட்டு குண்டு வெடித்தது என்றோ அல்லது எந்த மாதிரியான வெடிபொருள்கள் கொள்கலன்களில் இருந்தன என்றோ உடனடியாகத் தெரியவரவில்லை.

இதேவேளை, குண்டு வெடிப்புக்கும் இஸ்ரேலுக்கும் தொடர்பில்லை என இஸ்ரேலிய அதிகாரியொருவர் கூறியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .