2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

போராளிகளுக்கான உதவிகளை நிறுத்துகிறது ஐ.அமெரிக்கா

Editorial   / 2017 ஜூலை 20 , பி.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாட்டுக்கு எதிராகப் போராடிவரும் போராளிகளுக்கு, ஐக்கிய அமெரிக்காவின் மத்திய புலனாய்வு முகவராண்மையால் (சி.ஐ.ஏ) உதவி வழங்கப்படும் இரகசியத் திட்டத்தை இல்லாமல் செய்வதற்கு, ஐ.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முடிவெடுத்துள்ளார். ஜனாதிபதி

சிரிய ஜனாதிபதி அசாட்டுக்கு எதிராக, சிரியாவில் பல்வேறு அமைப்புகள் போரிட்டு வருகின்றன. 2013ஆம் ஆண்டு முதல், சி.ஐ.ஏ-இன் இந்தப் பயிற்சித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. 

ஜனாதிபதி ட்ரம்ப், அசாட் தொடர்பில் ஆதரவான கருத்தை வெளிப்படுத்திய போதிலும், இரசாயனத் தாக்குதல்களை அசாட்டின் படைகள் மேற்கொண்டதாகக் குற்றச்சாட்டு எழுந்த பின்னர், சிரியப் படைகள் மீது தாக்குதல் நடத்தியிருந்தது.

இந்நிலையிலேயே, அந்த நிலைப்பாட்டில் மீண்டும் மாற்றம் ஏற்பட்டு, அசாட்டுக்கு எதிரான போராளிகளுக்கான பயிற்சிகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு, முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

ஜூலை 7ஆம் திகதி, ஜனாதிபதி ட்ரம்ப்புக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெறுவதற்கு முன்பாக, ஜனாதிபதி ட்ரம்ப், சி.ஐ.ஏ பணிப்பாளர் மைக் பொம்பியோ, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எச்.ஆர். மக்மாஸ்டர் ஆகியோர் கலந்துரையாடி, இந்த முடிவை எடுத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .