2024 மே 02, வியாழக்கிழமை

மோசடிக் குற்றச்சாட்டுகளில் உத்தியோகபூர்வமாக குற்றஞ்சாட்டப்பட்டார் நெதன்யாகு

Editorial   / 2020 ஜனவரி 29 , பி.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்ட நடவடிக்கை எடுக்கப்படுதைத் தடுப்பதற்கான நாடாளுமன்ற சிறப்புரிமைக்கான தனது கோரிக்கையை இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகி விலக்கிக் கொண்டதையடுத்து, மோசடிக் குற்றச்சாட்டுகளில் உத்தியோகபூர்வமான நீதிமன்றத்தில் அவர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மத்திய கிழக்குக்கான ஐக்கிய அமெரிக்க – இஸ்ரேலிய சமாதானத் திட்டத்தின் வெளியீட்டுக்கு முன்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடனான சந்திப்புகளுக்காக ஐக்கிய அமெரிக்கத் தலைநகர் வொஷிங்டனில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இருக்கும்போதே ஜெருசசேல நீதிமன்றமொன்றொல் குற்றச்சாட்டுக்களை இஸ்ரேலிய சட்டமா அதிபர் நேற்றுத்  தாக்கல் செய்திருந்தார்.

முன்னதாக விசாரணை ஆரம்பிக்கும் முகமாக, மோசடிக் குற்றச்சாட்டுகள் மீதான சட்ட நடவடிக்கையிலிருந்து நாடாளுமன்ற சிறப்புரிமையயைப் பெறுவதை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கைவிட்டிருந்தார்.

சட்ட நடவடிக்கையிலிருந்து சிறப்புரிமையைப் பெறும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கோரிக்கையை விவாதிப்பதற்காக சபையொன்றை அமைப்பது குறித்து கலந்தாலோசிப்பதற்காக இஸ்ரேலிய நாடாளுமன்றம் நேற்று  கூடவிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .