2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

முக்கிய துறைமுகத்தின் சீன உரிமத்தை மீளாயும் அவுஸ்திரேலியா

Shanmugan Murugavel   / 2021 மே 03 , பி.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐக்கிய அமெரிக்க ஈருடகப் படையினருக்கான தளமொன்றாகப் பயன்படுத்தப்பட்ட, மூலோபாயமிக்க முக்கிய துறைமுகத்தின் சீன நிறுவனமொன்றின் உரிமத்தை தனது திணைக்களம் மீளாய்வதாக, அவுஸ்திரேலிய பாதுகாப்பமைச்சர் பீற்றர் டுற்றன் உறுதிப்படுத்தியுள்ளார்.

குறித்த உரிமம் குறித்து ஆலோசனை வழங்குமாறு பாதுகாப்பு திணைக்களத்தை, அவுஸ்திரேலியப் பிரதமர் ஸ்கொட் மொறிஸனின் அமைச்சரவையின் தேசிய பாதுகாப்பு செயற்குழு வினவியுள்ளதாக, நேற்றிரவு பிரசுரிக்கப்பட்ட நேர்காணலொன்றில் டுற்றன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், முதலீட்டை நீக்குவதை அரசாங்கம் கருத்திற் கொள்ளுமா என வினவப்பட்டதற்கு, தேசிய நலன்களை அரசாங்கம் கருத்திற் கொள்ளுமென டுற்றன் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .