2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

முதலாவது சீனத் தடைகளுக்கு இணங்கிய ஐரோப்பிய ஒன்றியம்

Shanmugan Murugavel   / 2021 மார்ச் 18 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மனித உரிமை மீறல்களுக்காக சீன அதிகாரிகளை கறுப்புப்பட்டியலிட ஐரோப்பிய ஒன்றியமானது நேற்று இணங்கியுள்ளதாக இரண்டு இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர்.

தியனமென் சதுக்க அடக்குமுறையைத் தொடர்ந்ததான 1989ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றிய ஆயுதத் தடையைத் தொடர்ந்ததான, சீனா மீதான முதலாவது தடை இதுவாகும்.

நான்கு சீனத் தனிநபர்கள் மீதும், ஒரு நிறுவனம் மீதும் பயணத் தடைகளை, சொத்து முடக்கங்களை, ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர்கள் அங்கிகரித்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றிய வெளிநாட்டமைச்சர்களின் எதிர்வரும் திங்கட்கிழமைய உத்தியோகபூர்வ அனுமதியையடுத்தே குறித்த பெயர்கள் வெளிப்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .